காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

பொங்கல் வைக்க உகந்த நேரம்!

வீடுகளில் பொங்கல் வைக்க உகந்த நேரம் எதுவென்று தினமணியின் இணையதள ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார். 

News image
பொங்கல் வைக்க உகந்த நேரம்
Updated On :14 ஜனவரி 2023, 11:18 am

DIN

வீடுகளில் பொங்கல் வைக்க உகந்த நேரம் எதுவென்று தினமணியின் இணையதள ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார். 

ஆடி மாதத்தில் தேடி விதைத்த விளைச்சல் அறுவடை செய்து பயனடையும் பருவமே தை மாதமாகும். அந்த அறுவடையில் கிடைத்த புத்தரிசியை சர்க்கரை, பால் நெய் சேர்த்துப் புதுப்பானையில் பொங்க வைத்து சூரியனுக்கு படைக்கும் திருநாளே பொங்கல் திருநாளாகும்.

சூரிய பகவான் தனுர் ராசியிலிருந்து மகர ராசியில் பிரவேசிப்பது மகரசங்கராந்தியாகும். எல்லோரும் எதிர்பார்த்து இருப்பது இந்த உத்தராயணம் எனச் சொல்லக் கூடிய அயணம் ஆரம்பமாகும். இது ஆறு மாதங்கள் அதாவது தை மாதம் முதல் ஆனி மாதம் முடிய இருக்கும் அயணமாகும். மகாபாரத போர் சமயத்தில் பீஷ்மாச்சாரியார் எதிர்பார்த்துக் காத்திருந்த காலம் இந்த உத்தராயணம் ஆகும். இது மிகவும் அதிக பலன் அளிக்கக்கூடிய அயண மாதங்களாகும்.

Story image

தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகையும், உத்தராயண புண்யகாலம் எனப்படும் மாதப் பிறப்பு தர்ப்பணமும். இது இரண்டும் எப்போதும் சேர்ந்து வரும். பொங்கல் பண்டிகையை எப்போது கொண்டாடுவது மற்றும் மாத பிறப்பு தர்ப்பணத்தை எப்போது செய்வது என்று பல சமயங்களில் மக்களுக்கு சந்தேகம் ஏற்படுவது உண்டு.

பொங்கல் பண்டிகை என்பது எப்போதும் புதுப்பானை வைத்து பொங்கல் செய்வது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் எந்தெந்த லக்னங்களில் செய்வது உகந்தது என்றால், இதற்கு மகர மற்றும் கும்ப லக்னங்கள் உத்தமமாகும் மற்றவை மத்திமமாகும். தை முதல் நாள் அன்று மகர மற்றும் கும்ப லக்னங்கள் காலை 06.00 மணி முதல் 10.00 வரையிலும் இருக்கும், இந்த நான்கு மணி சமயத்தில் எது ஏற்றதோ அதாவது ராகு காலம் மற்றும் எமகண்ட வேளை ஏற்படாமல் இருக்கும் லக்னமாக பார்த்துகொள்ள வேண்டும்.

Story image

மகரம் என்றால் தை மாதத்தையும், கும்பம் என்றால் பானையைக் குறிக்கும் ஆகையால் நம் முன்னோர்கள் கடைப்பிடித்த நேரங்களை நாமும் கடைப்பிடித்தால் நன்மை கிட்டும்.

தற்போது வரும் தை 1-ம் தேதி (15.01.2023) ஞாயிற்றுக்கிழமை மாதப் பிறப்பு ஏற்படுகிறது.

இந்த ஆண்டு எப்போது புதுப்பானை வைத்து பொங்கல் செய்வது?

தை 1ம் தேதி (15.01.2023) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரையிலும், காலை 10.30 முதல் 12.00 மணி வரையிலும் வைக்கலாம் 

Story image

உத்தராயணம் புண்யகால (தை மாதப் பிறப்பு) தர்ப்பணம் எப்போது?

காலை 08.00 மணிக்குள் (தர்ப்பணம் செய்வோர் விரதம் இருந்து செய்தால் முழு பலனையும் அடையலாம்) குளித்து விட்டு உத்தராயண புண்யகால தை மாதப் பிறப்பு பிதுர் தர்ப்பணத்தைச் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.