ஒரே நாளில் 2.66 லட்சம் பேர் பயணம்: சென்னை மெட்ரோ புதிய சாதனை!
சென்னை மெட்ரோ ரயிலில் இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் 2.66 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.


சென்னை மெட்ரோ ரயிலில் இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் 2.66 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து கோயம்பேடு பேருந்து நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு ரயில் சேவை வழங்கப்பட்டு வருகின்றது.
பண்டிகை காலங்களில் வெளியூருக்கு அதிக அளவிலான மக்கள் சென்னையிலிருந்து செல்வதால் சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். இதனால், கடந்த சில ஆண்டுகளாக பண்டிகை காலங்களில் மெட்ரோவை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூருக்கு செல்வோருக்கு வசதியாக இரவு 12 மணிவரை மெட்ரோ ரயில்கள் கடந்த வாரம் இயக்கப்பட்டன.
இதையடுத்து பொங்கல் விடுமுறை காலகட்டத்தில் மெட்ரோவில் பயணித்தோர் எண்ணிக்கையை மெட்ரோ நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது.
இதுவரை இல்லாத அளவு கடந்த ஜனவரி 13ஆம் தேதி மட்டும் 2,66,494 பயணிகள் மெட்ரோவில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜன.14-ல் 1.62 லட்சம், ஜன.15-ல் 1.08 லட்சம், ஜன.16-ல் 1.34 லட்சம், ஜன.17-ல் 1.65 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
அதிகபட்சமாக சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 21,731 பயணிகள் ஜனவரி 13ஆம் தேதி பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...