மாதவரம் பேருந்து நிலையத்தில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர வளர்ச்சி குழும தலைவருமான பி. கே. சேகர்பாபு, மாதவரம் பேருந்து நிலையத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
மாதவரம் பேருந்து நிலையத்தில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
மாதவரம் பேருந்து நிலையத்தில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர வளர்ச்சி குழும தலைவருமான பி. கே. சேகர்பாபு, மாதவரம் பேருந்து நிலையத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

இப்பேருந்து நிலையமானது கோயம்பேட்டில் ஏற்படும் வாகன நெரிசலை குறைக்கும் பொருட்டு மாதவரத்தில்  சென்னையிலிருந்து வடக்கு நோக்கி (ஆந்திரா, நெல்லூர், திருப்பதி மற்றும் காளஹஸ்தி (செங்குன்றம் வழியாக) செல்லும் பேருந்துகளுக்கான தனிப் பேருந்து நிலையமாக ரூ.94.16 கோடி செலவில் 8 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு 10.10.2018 முதல் மக்கள் பயன்பாட்டிற்காக இயங்கி வருகிறது. 

இப்பேருந்து நிலையத்தை முழு பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காகவும் மேலும் சிறப்பாக பராமரிப்பதற்காகவும் அமைச்சரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.

இப்பேருந்து நிலையத்தை முழு பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பொருட்டு கோயம்பேட்டிலிருந்து இயக்கப்படும் வடக்கு நோக்கி செல்லும் பேருந்துகள் அனைத்தையும் மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்க போக்குவரத்து துறை அமைச்சருடன் கலந்தாலோசிக்க முடிவு செய்யப்பட்டது.

கோயம்பேட்டிலிருந்து வடக்கு நோக்கி செல்லும் தனியார் பேருந்துகளையும் இப்பேருந்து நிலையத்திலிருந்து இயக்க நடவடிக்கை  மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆந்திரப்பிரதேசம் போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள தங்கும் அறை போதுமானதாக இல்லாததால் கூடுதல் இடம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆடவர் மற்றும் பெண்கள் பயணியர் தங்கும்  கூடங்களை 2, 4 மற்றும் 6 பேர் தங்கும்  அறைகளாக மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டது. பயணிகளின் காத்திருக்கும் அறைகளில் இருக்கை வசதி மற்றும் தொலைக்காட்சி பெட்டி அமைக்க முடிவு எடுக்கப்பட்டது.

முதல் மாடியில் உள்ள பேருந்துகள் காத்திருக்கும் பகுதியில்  பேருந்துகள் நிறுத்துவதை ஒழுங்குபடுத்த தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது மாநகர பேருந்து நிறுத்தம் இடத்தில் பயணிகளின் பயன்பாட்டிற்கு கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது

பேருந்து நிலையத்தின் முகப்பில் பயணிகளின் பயன்பாட்டிற்கு எல்இடி அறிவிப்பு பலகை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது .பேருந்து வளாகத்தின் மாநகர பேருந்து நுழைவு வாயிலில் நுழைவு வளைவு அமைக்க முடிவு  செய்யப்பட்டது.

பேருந்து நிலையத்தின் தென்புறமுள்ள நுழைவு வாயிலில் போக்குவரத்தின் காரணமாக விபத்து நிகழாதிருக்க காவல்துறையுடன் கலந்து ஆலோசித்து தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டது. கட்டிடப் பணிகளை மேம்படுத்தவும் மற்றும் தோட்டத்தை பராமரிக்கவும் முடிவு எடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், சென்னைப் பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் அன்சுல்மிஸ்ரா, முதன்மை செயல் அலுவலர் லட்சுமி மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சி குழும  உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com