நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தை அமாவாசை: ராணிப்பேட்டையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு!

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா, வன்னிவேடு அகத்தீஸ்வரர் சிவன் கோயில் குள வளாகத்தில் தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.

News image
Updated On :21 ஜனவரி 2023, 7:41 am

DIN


ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா, வன்னிவேடு அகத்தீஸ்வரர் சிவன் கோயில் குள வளாகத்தில் தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலானோர் கலந்துகொண்டு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். இந்து முன்னணி ஏற்பாட்டில் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வானது சௌராஷ்டிரா பாகவதர் ஸ்ரீதர் ஐயர் தலைமையில் நடத்தப்பட்டது. 

பித்ரு தோஷத்திலிருந்து விடுபடவும் இறைவன் அருள் கிடைக்க வேண்டும் நோய் நொடி இல்லாமல் மக்கள் வாழ வேண்டும் என்ற செல்வங்கள் கிடைக்க வேண்டும் என ஒரு நல்ல நோக்கத்தோடு இந்த தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வானது எந்த கட்டணமும் இல்லாமல் இலவசமாக நடத்தி வருகிறார். ஒவ்வொரு மாதமும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும்பொழுது தேச பக்தர்களுக்கும் மறைந்த தலைவர்களுக்கும் இந்த பாரத நாடு சுதந்திரம் பெற்ற தேச பக்தர்களுக்கும் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகிறது.

அதேபோன்று ராணுவ வீரர்கள் போரில் உயிரிழந்த வீரர்களுக்கும் தர்ப்பணம் கொடுக்கப்படுகிறது. மிகச் சிறப்பு இந்த நிகழ்ச்சியில் இந்து முன்னணி வேலூர் கோட்ட அமைப்பாளர் ராஜேஷ், எஸ்.கே.மோகன் இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் எஸ்.கே.மோகன் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தர்ப்பணம் கொடுத்தனர். மேலும்  முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பித்ரு தோஷத்தில் இருந்து விடுபட ஆலயத்திற்கு வந்து தர்ப்பணம் கொடுத்து நேர்த்திக்கடனைச் செலுத்துங்கள் எனத் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.