ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதில் முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ .செங்கோட்டையன், கே.சி.கருப்பணன்,
கே.வி.ராமலிங்கம், இதில் சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் , பண்ணாரி,
முன்னாள் சட்டமன்ற கே.எஸ்.தென்னரசு, சிவசுப்பிரமணியம், பாலகிருஷ்ணன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகுமார சின்னையன் உள்ளிட்ட ஏரலாலாமான அதிமுக நிர்வாகிகள் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு உள்ளனர்.
அதோடு மட்டுமல்லாமல், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, செம்மலை ஆகியோரும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பாக, நசியனூர் பகுதியில் உள்ள தனது குல தெய்வ கோயிலான அப்பாத்தாள் கோயிலில், பழனிசாமி மற்றும் நிர்வாகிகள் வழிபாடு செய்தனர்.
இதற்கிடையே, அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் 105 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை இறுதி செய்வது குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.