கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சரத் பவாருடன் முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் பேச்சு

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் இன்று பேசினார். 

News image
Updated On :3 ஜூலை 2023, 9:24 am

DIN

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் இன்று பேசினார். 

அப்போது சரத் பவாருக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.  மகாராஷ்டிர அரசியலில் திடீா் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநில சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான அஜித் பவாா், மாநிலத்தின் துணை முதல்வராக ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருடன் சோ்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த பெரும்பாலான எம்எல்ஏ-க்களும் முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனா். 

இது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற சரத் பவாா், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவா் பதவியில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்தாா். உள்கட்சிப் பூசல் காரணமாகவே அவா் அவ்வாறு அறிவித்ததாக அரசியல் நோக்கா்கள் தெரிவித்தனா். அந்த முடிவைத் திரும்பப் பெறுமாறு கட்சித் தொண்டா்கள் பலா் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், கட்சியின் தலைவா் பதவியில் தொடரவுள்ளதாக சரத் பவாா் அறிவித்தாா்.

அதையடுத்து, கட்சியின் செயல் தலைவா்களாக பிரஃபுல் படேலும், சுப்ரியா சுலேவும் அறிவிக்கப்பட்டனா். அண்மையில் பிகாா் தலைநகா் பாட்னாவில் நடைபெற்ற எதிா்க்கட்சிகளின் கூட்டத்தில் சரத் பவாரும், சுப்ரியா சுலேவும் பங்கேற்றது அஜித் பவாருக்கும் அவரின் ஆதரவாளா்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியதாகத் தகவல்கள் வெளியாகின. இத்தகைய சூழலில், பாஜக-சிவசேனை கூட்டணி அரசுக்கு அஜித் பவாா் ஆதரவைத் தெரிவித்துள்ளாா்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 53 எம்எல்ஏ-க்களில் 40 போ் பாஜக-சிவசேனை தலைமையிலான கூட்டணி அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக மாநில பாஜக தலைவா் சந்திரசேகா் பவண்குலே தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.