இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

அயனாவரம்: திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் காவலர் தற்கொலை

சென்னை அயனாவரத்தில் காவலர் அருண்குமார் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

News image
அயனாவரத்தில் காவலர் தற்கொலை
Updated On :10 ஜூலை 2023, 12:21 pm

DIN

ஆயுதப்படை  காவலர் ஒருவர் அயனாவரம் பகுதியில்  வீட்டில்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலைக்குக் காரணம் காவலரின் பணிச்சுமையா அல்லது குடும்பப் பிரச்னையா என பல கோணத்தில் போலீசார் விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.

நெல்லை மாவட்டம்  திருநெல்வேலியை சேர்ந்தவர் அருண்குமார் (22). இவர் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். காவல்துறை பணியில் சேர ஆர்வம் இருந்ததால் 2022 ஆம் ஆண்டு காவல்துறை பணியை பெற்றார். பின்னர் சென்னை புதுப்பேட்டை  ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வந்தார்.

இவருக்கு சுமார் 4 மாதத்திற்கு முன்பு திருநெல்வேலியில் திருமணம் நடைபெற்றது. மனைவியும் திருநெல்வேலி மாவட்டத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். அருண்குமார் ஆயுதப்படை காவலரிலிருந்து குதிரைப்படை காவலராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் திருமணம் ஆகி நான்கு மாதங்கள் ஆகியும் விடுமுறை அளிக்கப்படாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாகவும் இந்த நான்கு மாதத்திற்கு பிறகு 10 நாள்கள் மட்டுமே விடுமுறை வழங்கப்படுகிறது எனவும் செல்போனில் மட்டுமே தான் வாழ்க்கை தொடர்ந்து வருவதாகவும் தனது செல்போனில் ஆடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.

Story image

சென்னை  அயனாவரம் பகுதியில் தனியாக வசித்து வந்த ஆயுதப்படை காவலரான அருண்குமார்  மன வேதனை அதிகமாக இருந்ததால் இன்று காலை  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அயனாவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆயுதப்படை காவலரான அருண்குமாரின் உடல், கூறாய்வுக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

பின்னர், அவரின் உடலை சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொண்டு வருகின்றனர்.  மேலும் அயனாவரம் போலீசார் தரப்பில் ஆயுதப்படை காவலரான  அருண்குமாரின் மனைவிக்கும் குடும்பத்தாருக்கு தகவல்கள்  தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது கோவை மாவட்ட டிஐஜி விஜயகுமார் உயிரிழப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மேலும் ஒரு காவலர் சென்னையில் உயிரிழந்து உள்ளார் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.