விலை உயர்வால் தக்காளி சாதம் சாப்பிட முடியவில்லை: ஜெயக்குமார் கவலை!

தக்காளி விலை உயர்வால் தக்காளி சாதம் சாப்பிட முடியவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 
விலை உயர்வால் தக்காளி சாதம் சாப்பிட முடியவில்லை: ஜெயக்குமார் கவலை!

தக்காளி விலை உயர்வால் தக்காளி சாதம் சாப்பிட முடியவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

விலைவாசி உயர்வால் எங்கள் வீட்டில் தக்காளி சாதம் செய்வதில்லை என்றும் தக்காளி சாதம் சாப்பிடமுடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார். 

மேலும், நாளை காலை 9.30 மணிக்கு ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே அதிமுக சார்பில் ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார். இதில் சென்னை கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்றார்.

மேலும், மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாடு குறித்த முக்கிய ஆலோசனை இன்று நடத்தப்படுகிறது என்றார். 

இதையும் படிக்க: லியோ டிரைலர் எப்போது?

செந்தில் பாலாஜி குறித்து கருத்துக்கு, சிறையில் உள்ள செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி எதற்கு? வீண் செலவு தான் என்றார். மேகதாது அணை குறித்து உறுதியான நடவடிக்கை முதல்வரால் எடுக்க முடியாது. அதிமுக ஆட்சியில் காவல்துறையினர் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கினர். ஆனால் காவல்துறையினர் இருக்கின்றனரா என்பதே தெரியவில்லை, கொலை கொலையா முந்திரிக்கா என்றவாறு ஆங்காங்கே கொலைகள் பெருகி வருகின்றது. 

மக்களைப் பற்றி முதல்வருக்கு கவலையில்லை. மொத்தத்தில் மெத்தனமான அரசு நடந்து வருகின்றது என்று அவர் குற்றம் சாட்டினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com