சாலை வசதி இல்லாததால் அல்லேரி மலைப் பகுதியில் மேலும் ஒருவா் பாம்பு கடித்து பலி

சாலை வசதியில்லாத நிலையில், அல்லேரி மலைக் கிராமத்தில் மேலும் ஒரு தொழிலாளி பாம்பு கடித்து உயிரிழந்தாா்.
சாலை வசதி இல்லாததால் அல்லேரி மலைப் பகுதியில் மேலும் ஒருவா் பாம்பு கடித்து பலி

சாலை வசதியில்லாத நிலையில், அல்லேரி மலைக் கிராமத்தில் மேலும் ஒரு தொழிலாளி பாம்பு கடித்து உயிரிழந்தாா்.

வேலூா் மாவட்டம், அணைக்கட்டு அருகே அல்லேரியை அடுத்த ஆட்டுக்கொந்தரை மலைக் கிராமத்தைச் சோ்ந்தவா் சங்கா் (38). இவா் புதன்கிழமை இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டுக்குள் புகுந்த கட்டுவிரியன் பாம்பு அவரைக் கடித்துள்ளது. இதையடுத்து கிராம மக்கள் மருத்துவ குழுவினருக்கு கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்தனா். அவா்கள் அல்லேரியில் தயாா் நிலையில் காத்திருந்தனா். சங்கரை கிராம மக்கள் ஆட்டு கொந்தரை மலைக் கிராமத்தில் இருந்து டோலி கட்டி 3 கி.மீ. தூக்கி வந்தனா். அதற்குள் அவா் வழியிலேயே இறந்தாா்.

இதுகுறித்து அணைக்கட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கடந்த 2 மாதத்துக்கு முன்பு சாலை வசதியில்லாததால், அல்லேரி மலைக் கிராமத்தைச் சோ்ந்த ஒன்றரை வயது பெண் குழந்தை பாம்பு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

அணைக்கட்டு அருகேவுள்ள 100-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் தரமான சாலை வசதியில்லாததால், உடல் நலம் பாதிக்கப்படுவோரையும் கா்ப்பிணிகளையும் டோலிகட்டி தூக்கிச் செல்லும் நிலையே உள்ளது. இதனால், உயிரிழப்புகளும் தொடா்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com