சாத்தூர்: சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை அகழ்வாராய்ச்சியில் பச்சைகுத்த பயன்படும் அச்சுகண்டறியப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை அருகே வைப்பற்றின் வடகரையில் அமைந்துள்ள விஜயகரிசல்குளம் ஊராட்சிகுட்பட்ட உச்சிமேட்டில் 25 ஏக்கர் பரப்பளவிலான தொல்லியல் மேட்டில் கடந்த மார்ச் 16 ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதையும் படிக்க | மீனவர்கள் பிரச்னை: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
இந்த அகழாய்வில் முன்னதாக சுடுமண்ணால் ஆன பகடைக்காய், தக்களி, ஆட்டக்காய்கள், முத்து மணிகள், சங்கு வளையல்கள், சுடு மண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருட்கள், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சுடு மண், அகல்விளக்கு, யானை தந்தால் செய்யப்பட்ட அணிகலன் மற்றும் பதக்கம், சுடுமண்ணால் ஆன தொங்கட்டான், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட, காலத்தால் அழியாத கலை நயம் மிக்க கண்கவர் குவளை என 2850-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்பொழுது பூ படம் வரையப்பட்ட உடலில் பச்சை குத்த பயன்படும் அச்சு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் அப்போதைய தொன்மையானவர்கள் அழகு சாதன பொருட்கள் பழக்கம் கொண்டுள்ளதை உறுதி செய்வதாக தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

லமின் யமாலிடம் மீண்டும் தோற்ற எம்பாபே! | FIFA | FIFA World Cup 2026 | Lamine Yamal | Kylian Mbappé |

கேரள அரசின் ஆபரேஷன் டூஃபான் நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் பங்கேற்பு?







