திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

தஞ்சாவூர் அருகே முதல்வர் மு.க. ஸ்டாலின் திடீர் ஆய்வு!

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பப் பதிவேற்றப் பணி நடைபெறுவதை வியாழக்கிழமை முதல்வர் மு.க. ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

News image

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே மனையேறிப்பட்டியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பப் பதிவேற்றப் பணியை வியாழக்கிழமை திடீர் ஆய்வு செய்து பெண்களிடம் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின்.

Updated On :27 ஜூலை 2023, 1:20 pm IST


திருக்காட்டுப்பள்ளி: தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பப் பதிவேற்றப் பணி நடைபெறுவதை வியாழக்கிழமை முதல்வர் மு.க. ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக முதல்வர் திருச்சி, தஞ்சாவூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருச்சிக்கு புதன்கிழமை காலை வந்தார். திருச்சியில் வியாழக்கிழமை காலை வேளாண் சங்கமம் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த முதல்வர், கார் மூலம் தஞ்சாவூர் நோக்கிப் புறப்பட்டார்.

தஞ்சாவூருக்கு வரும் வழியில் செங்கிப்பட்டி அருகே மனையேறிப்பட்டி கிராமத்தில் வந்தபோது, அப்பகுதியிலுள்ள கிராம சேவை மையத்தில் நடைபெறும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கான விண்ணப்பப் பதிவேற்றப் பணி நடைபெறுவதை திடீர் ஆய்வு செய்தார். அப்போது, அங்கிருந்த பெண்களிடம் விண்ணப்பங்கள் கொடுத்துவிட்டீர்களா? எனக் கேட்ட முதல்வர், உங்களுக்கான உரிமைத் தொகை கிடைப்பதற்கு ஏற்பாடு செய்கிறேன் என உறுதியளித்தார்.

இந்த ஆய்வின்போது நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.