ஆம்பூர் அருகே சார்ஜ் செய்யப்பட்ட எலக்ட்ரிக் பைக் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு நிலவியது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஜங்களாமேடு பகுதியைச் சேர்ந்த சசிகுமார். இவர் ஆம்பூர் அடுத்த அய்யனூர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து மளிகை பொருட்களை ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் சில்லறை விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில் சசிகுமார் புதியதாக வாங்கிய எலக்ட்ரிக் பைக்கிற்கு இன்று வீட்டில் சார்ஜ் செய்யும் போது எலக்ட்ரிக் பைக் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது.
இதனைக்கண்ட சசிகுமார் உடனடியாக மின் இணைப்பை துண்டித்து தீயை அணைப்பதற்குள் தீ முழுவதுமாக பரவி எலக்ட்ரிக் பைக் முற்றிலும் எரிந்து நாசமானது.
மேலும் இதுகுறித்து இருசக்கர வாகன விற்பனையாளர்கள் மற்றும் ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் 10 இடங்களில் சதமடித்த வெய்யில்!

தெலுங்கில் மட்டுமே 15 கோடி பார்வைகள், 16 லட்சம் லைக்குகள் பெற்ற நானியின் பாடல்!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
‘க்வாட்’ கூட்டமைப்பு வெளியுறவு அமைச்சா்கள் கூட்டம்: சீனா எதிர்வினை!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



