வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கேஜரிவால் சந்திப்பு

சென்னை வந்தடைந்த தில்லி முதல்வர் கேஜரிவால் ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் நேரில் சந்தித்துள்ளார்.

News image
Updated On :1 ஜூன் 2023, 11:57 am

சென்னை வந்தடைந்த தில்லி முதல்வர் கேஜரிவால் ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் நேரில் சந்தித்தார்.

இந்த சந்திப்பில் அரவிந்த் கேஜரிவாலுடன் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டோரும் உள்ளனர். அதிகாரிகள் நியமனத்தில் மத்திய அரசின் அவசர சட்டம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.

தில்லி மாநில அரசின் நிா்வாக அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் மத்திய அரசால் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதற்கு எதிராக குரல் கொடுக்குமாறு பிற மாநில முதல்வா்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவா்களை அரவிந்த் கேஜரிவால் சந்தித்து வலியுறுத்தி வருகிறாா்.

பிகாா் முதல்வா் நிதீஷ்குமாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோரை ஏற்கெனவே அவா் சந்தித்துள்ளாா். அதைத் தொடா்ந்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது டி.ஆர்.பாலு, கனிமொழி, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் உடன் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.