01.04.2021-ஆம் தேதிப்படி தமிழக அரசிடம் ரூ.17,747.56 லட்சங்கள் செலவழிக்கப்படாமல் கிடக்கிறது. மேலும், கல்வி அமைச்சகத்தால் 27.12.2021-ஆம் தேதி இது மறுமதிப்பீடு செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த ஆண்டு செலவழிக்கப்படாத நிலுவையை சரி செய்து மத்திய அரசானது பிஎம்-போஷான் திட்டத்தின் கீழ்,,17.03.2022 தேதியிட்ட அனுமதி கடிதம் மூலம் 2021-22 ஆம் ஆண்டிற்கான 2ஆவது தவணையாக ரூ.11,185.27 லட்சங்கள் தமிழகத்திற்கு விடுவித்துள்ளது. நிதியாண்டு 2022-23-இன்போது மத்திய அரசு பிஎம்-போஷான் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு மொத்தம் ரூ. 47,700.10 லட்சங்கள் விடுவிடுத்துள்ளது. அதேபோன்று, நிதியாண்டு 2021-22-இல் மொத்தம் ரூ.1,59,882.18 லட்சங்களும், 2022-23-இல் மொத்தம் ரூ. 2,10,723.32 லட்சங்களும் சமக்ரா சிக்ஷா திட்டத்தின்கீழ் விடுவித்திருக்கிறது. தமிழகத்திற்கு மத்திய அரசிடமிருந்து சமக்ரா சிக்ஷா திட்ட நிதியை விடுவிப்பதற்கான நிலுவை பொறுப்பு ஏதும் இல்லை என்று அதில் அமைச்சா் அன்னபூா்ணா தெரிவித்துள்ளாா்.