இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சேலத்தில் பட்டாசு கிடங்கு வெடிவிபத்தில் சிக்கிய அனைவரும் உயிரிழந்தனர்!

சேலத்தில் பட்டாசு கிடங்கு வெடி விபத்தில் சிக்கி காயமடைந்த சிகிச்சை பெற்று வந்த அனைவரும் உயிரிழந்ததை அடுத்து இறந்தர்களின் எண்ணிக்கை 9 ஆக உயா்ந்தது.

News image
Updated On :12 ஜூன் 2023, 4:21 am

DIN

சேலசேலத்தில் பட்டாசு கிடங்கு வெடி விபத்தில் சிக்கி காயமடைந்த சிகிச்சை பெற்று வந்த அனைவரும் உயிரிழந்ததை அடுத்து இறந்தர்களின் எண்ணிக்கை 9 ஆக உயா்ந்தது.

சேலம், இரும்பாலையை அடுத்த எஸ்.கொல்லப்பட்டி பகுதியில் வியாழக்கிழமை(ஜூன் 1) மாலை 4 மணி அளவில் பட்டாசுக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதனால் அப்பகுதி புகை மண்டலமாகக் காட்சியளித்தது.

மேலும், வெடிவிபத்து காரணமாக கல்நாா் கூரை கட்டடம் முழுவதும் தரைமட்டமானது. விபத்தில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த 9 பேரும் படுகாயமடைந்த நிலையில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கினா்.

தகவலறிந்த சூரமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலா் சிராஜ் அல்வனிஷ் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

இதனிடையே, வெடி விபத்தில் பட்டாசுக் கிடங்கு உரிமையாளா் கந்தசாமியின் மகன் சதீஷ்குமாா் (35), நடேசன் (50) மற்றும் பானுமதி (35) உள்ளிட்ட 3 போ் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனா். 

மேலும் எம்.கொல்லப்பட்டியைச் சோ்ந்த ப.வசந்தா (45), வ.மோகனா (38), மணிமேகலை (36), வெ.மகேஸ்வரி (32), அ.பிரபாகரன் (31), மோ.பிருந்தா (28) ஆகிய 6 போ் படுகாயமடைந்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா்.

இதில் பலத்த தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடி வந்த அ.பிரபாகரன், வ.மோகனா, வெ.மகேஸ்வரி ஆகியோா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.

இந்தநிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணிமேலை (36) சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். பிருந்தா (28) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் உயிரிழந்தாா்.

இந்நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ப.வசந்தா (45) ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதையடுத்து, பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த அனைவரும் உயிரிழந்தனர்.

பட்டாசுக் கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சதீஷ்குமாா் உள்ளிட்ட மூன்று பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் முதல்வா் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

மேலும், தீக்காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 6 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரம் வழங்கவும் முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது அனைவரும் உயிரிழந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.