/

திருச்சி - காரைக்கால் ரயில் நேரம் ஜூலை 3 முதல் மாற்றம்

திருச்சியிலிருந்து காரைக்கால் செல்லும் முன்பதிவு இல்லா விரைவு ரயிலின் பயண நேரம் ஜூலை 3 -ஆம் தேதி முதல் மாற்றப்படுகிறது.

News image
Updated On :20 ஜூன் 2023, 10:30 pm

DIN

திருச்சியிலிருந்து காரைக்கால் செல்லும் முன்பதிவு இல்லா விரைவு ரயிலின் பயண நேரம் ஜூலை 3 -ஆம் தேதி முதல் மாற்றப்படுகிறது.

தெற்கு ரயில்வே சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: திருச்சியிலிருந்து காரைக்காலுக்கு முன்பதிவு இல்லா விரைவு ரயில் (எண்: 06880) தினமும் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஜூலை 3 முதல் திருச்சியிலிருந்து வழக்கமாக காலை 10.45 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 55 நிமிஷங்கள் முன்னதாக காலை 9.50 மணிக்கு புறப்படும். இந்த ரயில் காரைக்காலுக்கு பிற்பகல் 3 மணிக்குப் பதிலாக, 2.05 மணிக்கு சென்றடையும்.

அதேபோல காரைக்காலிலிருந்து தஞ்சாவூருக்கு இயக்கப்படும் முன்பதிவு இல்லா விரைவு ரயில் (எண்: 06457) ஜூலை 3 முதல் வழக்கமாக பகல் 12.30 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 50 நிமிஷங்கள் தாமதமாக பிற்பகல் 1.20 மணிக்கு புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.