தனியார் பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை: அமைச்சர் அன்பில் மகேஸ்

தனியார் பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 
தனியார் பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை: அமைச்சர் அன்பில் மகேஸ்

தனியார் பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களைச் சேர்ந்த தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகார சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி தடாகம் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.

விழாவில் பங்கேற்ற பிறகு சாய்பாபா காலனி குப்பக்கோனாம்புதூர் தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் அமைச்சர் திடீர் ஆய்வு நடத்தினார். 

பின்னர் ஆசிரியர்கள், பள்ளிக் குழந்தைகளுடன் கலந்துரையாடிய அமைச்சர், கற்றல் கற்பித்தல் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் உணவுக்கூடம், கழிவறை உள்ளிட்ட பள்ளி வளாகத்தின் பல்வேறு பகுதிகளை சுற்றிப் பார்த்து ஆய்வு நடத்தினார். 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தனியார் பள்ளிகள் அங்கீகார ஆணையைப் பெற அலைக்கழிக்கப்படக் கூடாது என்பதற்காக அவர்களை தேடி வந்து அரசு ஆணையை வழங்கி வருகிறது. 

அங்கீகாரம் பெறாத பள்ளிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து, அங்கீகாரம் பெற விண்ணப்பிக்க அறிவுறுத்தி வருகிறோம். அனுமதியில்லாத   பள்ளியை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க முடியாது. முதலில் அங்கீகாரம் பெறாத பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும், அவர்களை அங்கீகாரம் பெற வைக்கும் முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுபடுவார்கள்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாயம் தமிழ் மொழி கற்பிக்க வேண்டும் என அறிவிப்பை வெளியிட்டார். கடந்த ஆட்சியில் எப்படி எனத் தெரியாது. இந்த அரசு ஆட்சி பொறுப்பேற்றது தமிழ் கற்பிக்கப்படுவது கண்காணிக்கப்படுகிறது. அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ்மொழியை கற்பிக்க தமிழ் ஆசிரியரை நியமிக்க வலியுறுத்தியுள்ளோம். ஒவ்வொரு முறையும் ஆய்விற்கு செல்லும்போதும் இதை கண்காணிக்கிறோம். தற்போது பள்ளி மாணவர்களின் தகவல்கள் தனியார் அமைப்புகளால் திருடப்படுவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com