விரைவில் டாஸ்மாக் கடைகளிலும் டிஜிட்டல் பில்
தமிழகத்தில் அரசு நடத்தும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் இனி மதுவாங்கும் மதுப்பிரியர்களுக்கு, டிஜிட்டல் பில் வழங்கும் நடைமுறை விரைவில் அமலுக்கு வரவிருக்கிறது.


சென்னை: தமிழகத்தில் அரசு நடத்தும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் இனி மதுவாங்கும் மதுப்பிரியர்களுக்கு, டிஜிட்டல் பில் வழங்கும் நடைமுறை விரைவில் அமலுக்கு வரவிருக்கிறது.
டாஸ்மாக் நிறுவனம், தனது அனைத்துக் கடைகளையும் டிஜிட்டல் மயமாக்கி, அனைத்து விற்பனையையும் கணினியில் பதிவு செய்யும் நடைமுறை விரைவில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதற்காக, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துக் கடைகளையும் டிஜிட்டல் மயமாக்க ரூ.294 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் பணிகள் நிறைவடைய கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் வரை ஆகலாம் என்றும், இந்த பணி முடிவடைந்துவிட்டால், டாஸ்மாக் ஊழியர்கள் சீராக பணியாற்ற வழிவகை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானங்களை அனுப்புவது முதல், விற்பனை வரை அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
இதனால், மதுப்பிரியர்கள், தாங்கள் வாங்கும் மதுபானங்களுக்கு டிஜிட்டல் பில் மற்றும் ரொக்கமற்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...