திருப்பூரில் மனைவியின் தலையைத் துண்டித்த கணவர் கைது!

திருப்பூரில் குடும்பப் பிரச்னை காரணமாக மனைவியின் தலையைத் துண்டித்து கொலை செய்த கணவரை காவல் துறையினர் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.

கொலை செய்யப்பட்ட பவித்ராவுடன் கணவர் மணிகண்டன் (கோப்புப்படம்).

Published On :

திருப்பூர்: திருப்பூரில் குடும்பப் பிரச்னை காரணமாக மனைவியின் தலையைத் துண்டித்து கொலை செய்த கணவரை காவல் துறையினர் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு டி.எம்.எஸ் நகரில் உள்ள தனியார்  குடியிருப்பில் வசித்து வருபவர் மணிகண்டன்(37), இவரது மனைவி பவித்ரா (31), இந்தத் தம்பதிக்கு ஒன்றரை வயதில் மகன் உள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள கோயிலில் பூசாரியாக வேலை செய்துவந்தார். 

இந்த கணவன் மனைவிக்கு இடையே குடும்பப் பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே வெள்ளிக்கிழமை மாலையும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் அரிவாளால் மனைவி பவித்ராவை பல இடங்களில் வெட்டியுள்ளார். 

Story image

மேலும், பவித்ராவின் தலையையும் துண்டித்துக் கொலை செய்து விட்டு தலைமறைவாகியுள்ளார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த திருப்பூர் வடக்கு காவல் துறையினர் அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். 

மேலும், தலைமறைவாக இருந்த மணிகண்டனைப் பிடித்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.