/

சிதம்பரம்: ஊதியம் வழங்கக் கோரி மருத்துவர்கள் போராட்டம்!

சிதம்பரத்திலுள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிப்ரவரி மாத ஊதியம் வழங்கக் கோரி  மருத்துவர்கள், ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனர். 

News image
Updated On :4 மார்ச் 2023, 8:02 am

DIN

சிதம்பரம்: சிதம்பரத்திலுள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிப்ரவரி மாத ஊதியம் வழங்கக் கோரி மருத்துவர்கள், ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனர். 

சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பேராசிரியர்கள் மருத்துவம் அல்லாத ஊழியர்கள் என 1,800-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த ஜனவரி, பிப்ரவரி மாத ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. 

இதையடுத்து, உடனடியாக ஊதியம் வழங்க கோரி  மருத்துவமனை வாயிலில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவர் அல்லாத ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் மனோகர், பழனிவேல், ரவி, மருத்துவர் பாலாஜி சாமிநாதன், குழந்தை நல மருத்துவர் ராமநாதன். மருத்துவர் மணவாளன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில்  தமிழக அரசு உடனடியாக ஊதியம் வழங்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

தமிழக அரசு இன்னும் கால தாமதம் ஏற்படுத்தினால் போராட்டம் தீவிரம் எனவும் அறிவித்துள்ளனர். மேலும் ஒவ்வொரு மாதமும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் இல்லாத ஊழியர்களுக்கு தங்கு தடையின்றி ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.