மேட்டூர் அணை நீர்வரத்து 1,373 கன அடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணைத்து வரும் நீரின் அளவு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1,224 கன அடியிலிருந்து வினாடிக்கு 1,373 கன அடியாக அதிகரித்துள்ளது.


சேலம்: கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணைத்து வரும் நீரின் அளவு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1,224 கன அடியிலிருந்து வினாடிக்கு 1,373 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 1000 கன அடி வீதம் குடிநீர் தேவைக்காக திறக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க.. நாட்டில் மூன்று வாரங்களாக சப்தமில்லாமல் அதிகரிக்கும் கரோனா
அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவிலிருந்து மீண்டுள்ளது.
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.52 அடியாக உள்ளது. நீர் இருப்பு 69.48 டி.எம்.சி.யாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...