உடல் ஒத்துழைக்கும் வரை உழைத்து வாழ்வேன்: இன்று சர்வதேச மகளிர் தினம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியிலுள்ள மருந்தகங்களுக்கு மருந்துப் பெட்டிகளை சைக்கிள் ரிக்ஷாவில் கொண்டு சென்று விநியோகிக்கும் பணியை சுமார் 40 ஆண்டுகளாக செய்து வருகிறார் 71 வயதான ரத்தினம்மாள்.
2007-ஆம் ஆண்டு மகளிர் தினத்தையொட்டி, ரத்தினம்மாள் குறித்து தினமணியில் வெளியான செய்தி. (வலது) சைக்கிள் ரிக்ஷாவில் மருந்துப் பெட்டிகளை ஏற்றிச் செல்லும்வேலை செய்து வரும் ரத்தினம்மாள்.
2007-ஆம் ஆண்டு மகளிர் தினத்தையொட்டி, ரத்தினம்மாள் குறித்து தினமணியில் வெளியான செய்தி. (வலது) சைக்கிள் ரிக்ஷாவில் மருந்துப் பெட்டிகளை ஏற்றிச் செல்லும்வேலை செய்து வரும் ரத்தினம்மாள்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியிலுள்ள மருந்தகங்களுக்கு மருந்துப் பெட்டிகளை சைக்கிள் ரிக்ஷாவில் கொண்டு சென்று விநியோகிக்கும் பணியை சுமார் 40 ஆண்டுகளாக செய்து வருகிறார் 71 வயதான ரத்தினம்மாள்.
"உடல் ஒத்துழைக்கும் வரை உழைத்து வாழ்வேன்' என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
செஞ்சியைச் சேர்ந்தவர்கள் கண்ணம்மாள், ரத்தினம்மாள். இருவரும் சகோதரிகள். செஞ்சியில் உள்ள மருந்தகங்களுக்கு வெளியூர்களில் இருந்து பேருந்துகளில் அனுப்பப்படும் மருந்துப் பெட்டிகளை சைக்கிள் ரிக்ஷாவில் ஏற்றி, ஒரு பெட்டிக்கு ரூ. 10 கூலியாகப் பெற்று உரிய மருந்தகங்களில் விநியோகிப்பது இவர்களது வேலை.
இருவரின் திருமண வாழ்க்கை சரிவர அமையவில்லை.
இவர்களது பணி குறித்து கடந்த 2007-ஆம் ஆண்டு தினமணியில் "கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை' என்ற தலைப்பில் மகளிர் தினத்தன்று புகைப்படத்துடன் செய்தி வெளியானது.
சகோதரிகள் இருவரும் செஞ்சியிலுள்ள பி. ஏரிக் கரையில் வசித்து வந்தனர்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கண்ணம்மாள் இறந்துவிட்டார். பி. ஏரியில் ஆக்கிரமிப்பில் உள்ள குடியிருப்புகள் நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டதால் செஞ்சி பெரியகரத்தில் வாடகை வீட்டில் ரத்தினம்மாள் வசித்து வருகிறார்.
தமிழக அரசின் முதியோர் உதவித் தொகை மாதம் ரூ.1000 வழங்கப்படுவதாகவும், மருந்துப் பெட்டிகளை கடைகளுக்கு விநியோகித்தால் தினமும் ரூ.200 கிடைக்கும்; ஒரு சில நாள்களில் அதுவும் கிடைக்காது என ரத்தினம்மாள் கூறினார்.
"உழைப்பதற்கு வயது இதுவரை தடையாக இருந்ததில்லை. யாருடைய உதவியையும் எதிர்பார்ப்பதில்லை.
உடல் ஒத்துழைக்கும் வரை உழைத்து வாழ வேண்டும் என்பதுதான் எனது குறிக்கோள். சுமார் 40 ஆண்டுகளாக இந்த வேலையைச் செய்து வருகிறேன்.
எனது சகோதரியின் இறப்புக்குப் பிறகு, நான் தனியாக வசித்து வருகிறேன்.
கால் வலி நாளுக்குநாள் அதிகரிப்பதால், ரிக்ஷாவை மிதிக்க முடிவதில்லை.
இருப்பினும், வயிற்றுப் பிழைப்புக்காக வலியோடுதான் வேலை செய்து வருகிறேன்' என்றார் ரத்தினம்மாள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com