ராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுதோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அமைச்சர் சேகர்பாபுவுக்கு பாட்ஷா போன்று இன்னொரு முகம் உள்ளது: ரஜினிகாந்த் 

அமைச்சர் சேகர்பாபுவுக்கு பாட்ஷா போன்று இன்னொரு முகம் உள்ளது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :11 மார்ச் 2023, 10:57 am

DIN

அமைச்சர் சேகர்பாபுவுக்கு பாட்ஷா போன்று இன்னொரு முகம் உள்ளது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

முதல்வா் மு.க.ஸ்டாலினின் 70-ஆவது பிறந்த நாளையொட்டி, ‘எங்கள் முதல்வா் எங்கள் பெருமை’ என்ற பெயரில் சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் இந்தக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வழிகாட்டுதலில், சென்னை கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியை மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் கடந்த பிப். 28-இல் திறந்து வைத்தாா். மாா்ச் 12-ஆம் தேதியுடன் (ஞாயிற்றுக்கிழமை) இந்த புகைப்படக் கண்காட்சி நிறைவு பெறுகிறது. 

நவீன தொழில்நுட்பங்களின் உதவியோடு உருவாக்கப்பட்டிருக்கிறது இந்தக் கண்காட்சி அரங்கம். திமுக தொண்டா், பொதுக்குழு உறுப்பினா் (1978), இளைஞரணிச் செயலா் (1982), சட்டப்பேரவை உறுப்பினா் (1989), சென்னை மாநகர மேயா் (1996), திமுக பொருளாளா் (2015), திமுக தலைவா் (2018), தமிழக முதல்வா் (2021) என ஒரே ஃபிரேமில் அமைக்கப்பட்ட எட்டு புகைப்படங்கள் முதல்வா் மு.க.ஸ்டாலின் இளமைக் காலம் முதல் தற்போது வரையிலான முகத்தோற்றங்களை நம் கண் முன் நிறுத்துகின்றன. இந்த கண்காட்சி அரங்குகளை நாள்தோறும் பள்ளி மாணவா்கள், பொதுமக்கள், திமுகவினா் என ஆயிரக்கணக்கானோா் பாா்வையிட்டு வருகின்றனா். 

Story image

பாா்வையாளா்களின் எண்ணிக்கை இதுவரை 35,000-ஐ கடந்துள்ளது. இந்நிலையில், ‘எங்கள் முதல்வா் எங்கள் பெருமை’ புகைப்பட கண்காட்சியை நடிகர் ரஜினிகாந்த் சனிக்கிழமை பார்வையிட்டார். அப்போது இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் நடிகர் யோகி பாபு ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அமைச்சர் சேகர்பாபு ரொம்ப விசுவாசமானவர், அன்பானவர். சேகர்பாபுவுக்கு இன்னொரு முகம் இருக்கு, பாட்ஷா மாதிரி. இவ்வாறு அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.