வடமாநில தொழிலாளர் குறித்து அவதூறாக பேசிய விடியோ வெளியான விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது வடமாநில தொழிலாளர் குறித்து சீமான் அவதூறாக பேசியதாக அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் விடியோ பகிர்ந்திருந்தார்.
ஹிந்தி பேசும் வடமாநில தொழிலாளர்கள் மீது வெளிப்படையாக வன்முறை தூண்டப்படுகிறது. இப்படி வன்முறையைத் தூண்டும் சீமான் போன்றவர்கள் மீது ஏன் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விடியோவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், சீமான் மீது வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு கருங்கல்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆப்கான்-பாகிஸ்தான் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் : சீனா தகவல்

நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

திமுக வேட்பாளா்கள், தொகுதி நிா்வாகிகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

வெற்றி ஒன்றே இலக்கு: முதல்வா் ஸ்டாலின்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


