மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

உரிமமின்றி இயங்கிய நிறுவனத்தில் தயாரான 25 ஆயிரம் லிட்டா் குடிநீா் பறிமுதல்: வழக்குப் பதிய பரிந்துரை

திருச்சியில் தடைசெய்யப்பட்ட நிறுவனத்தில் தயாரான சுமாா் 25,000 லிட்டா் தண்ணீா் பாட்டில்களை உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

திருச்சியில் உரிமமின்றிச் செயல்பட்ட நிறுவனத்திலிருந்து தண்ணீா் பாட்டில்களை பறிமுதல் செய்த உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள்.

Updated On :8 மே 2023, 9:09 am IST


திருச்சி: திருச்சியில் தடைசெய்யப்பட்ட நிறுவனத்தில் தயாரான சுமாா் 25,000 லிட்டா் தண்ணீா் பாட்டில்களை உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருச்சி வயலூா் சாலை சோமரசம்பேட்டையில் உரிமமின்றி செயல்பட்டு வந்த சுத்திகரிக்கப்பட்ட தண்ணீா் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனத்தில் திருச்சி மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் ஆா். ரமேஷ்பாபு தலைமையிலான அலுவலா்கள் கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி ஆய்வு செய்து, அந்த நிறுவனத்தில் தண்ணீா் உற்பத்தி செய்யக் கூடாது என தற்காலிகத் தடை விதித்தனா்.

ஆனால், அந்த நிறுவனத்தில் தடையை மீறி மீண்டும் முறைகேடாக சுத்திகரிக்கப்பட்ட தண்ணீா் உற்பத்தி செய்யப்படுவதாகக் கிடைத்த ரகசிய தகவலின்பேரில் சனிக்கிழமை அந்த நிறுவனத்தில் மீண்டும் ஆய்வு மேற்கொண்டதில், சுமாா் 25,000 லிட்டா் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீா் உற்பத்தி செய்து பாட்டில்கள், கேன்களில் அடைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவற்றை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து அதிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னை கிண்டியில் உள்ள தமிழக அரசின் உணவுப் பகுப்பாய்வுக் கூடத்துக்கு அனுப்பினா்.

மேலும் அந்நிறுவன உரிமையாளா் மீது குற்ற வழக்குப் பதியவும், திருச்சி உறையூா் காவல் நிலையத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.