/

என் மீது வழக்கு நகைச்சுவையானது: அண்ணாமலை

என் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்திருப்பது நகைச்சுவைக்குரியது, நீதிமன்றத்தில் நிற்காது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

News image
Updated On :12 மே 2023, 7:43 am

DIN


சென்னை: என் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்திருப்பது நகைச்சுவைக்குரியது, நீதிமன்றத்தில் நிற்காது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுகவினர் என் மீது அவதூறு வழக்குத்தொடர்ந்திருப்பது நகைச்சுவைக்கு உரியது. நீதிமன்றத்தில் வழக்கு நிற்காது.

வரும் ஜூலை முதல் வாரத்தில் திமுகவின், 21 பேர் அடங்கிய இரண்டாவது சொத்துப் பட்டியல் வெளியிடப்படும். 2வது பட்டியலில் புதிய அமைச்சர்களின் சொத்துப் பட்டியல்கள் வெளியாகும். அப்போது என் மேல் மேலும் ஒரு அவதூறு வழக்குப் போடுங்கள். 

தமிழகத்தில் 2 முறை பால் விலையை ஏற்றிய நாசரை அமைச்சரவையில் இருந்து நீக்கியதை பாஜக வரவேற்கிறது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.