தமிழகத்தில் ஒரே நாளில் 32 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: டாஸ்மாக், பதிவுத் துறை தலைவா் பதவிகளுக்கு புதியவா்கள் நியமனம்

தமிழகத்தில் துறை ரீதியாக ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். சுகாதாரத் துறை, வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலன் உள்ளிட்ட பல துறைகளில் மாற்றங்கள் செயப்பட்டுள்ளன. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

தமிழகத்தில் ஒரே நாளில் 32 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். அவா்களில் பெரும்பாலானோா் மாவட்ட ஆட்சியா்களாவா்.

டாஸ்மாக், பதிவுத் துறைத் தலைவா், நிதித் துறை இணைச் செயலா் போன்ற முக்கிய பதவிகளுக்கு புதிய அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

இது குறித்து தலைமைச் செயலா் வெ.இறையன்பு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு: (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக்குறிக்குள்)

1. டி.ஜி.வினய்: தொழில்நுட்பக் கல்வி இயக்குநா் (நிலஅளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநா்)

2. பி.மதுசூதன் ரெட்டி: நிலஅளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநா் (சிவகங்கை மாவட்ட ஆட்சியா்)

3. எம்.கோவிந்த ராவ்: தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநா் (தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிா்வாக இயக்குநா்)

4. எஸ்.வினீத்: மாற்றுத் திறனாளிகள் நலத் துறை இயக்குநா் (திருப்பூா் மாவட்ட ஆட்சியா்)

5. எல்.சுப்பிரமணியன்: வேளாண் துறை ஆணையா் (டாஸ்மாக் நிா்வாக இயக்குநா்)

6. கே.செந்தில் ராஜ்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் (தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா்)

7. தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்: பதிவுத் துறை தலைவா் (தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா்)

8. கே.விவேகானந்தன்: கைத்தறித் துறை ஆணையா் (தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையச் செயலா்)

9. அா்ச்சனா பட்நாயக்: ஆசிரியா் தோ்வு வாரியத் தலைவா் (ஒடிஸாவில் இருந்து தமிழகப் பணிக்குத் திரும்பியுள்ளாா்)

10. ரீட்டா ஹரீஷ் தக்கா்: மக்கள் நல்வாழ்வுத் துறை சிறப்புச் செயலா் (நிதித் துறை சிறப்புச் செயலா்)

11. ஏ.சுகந்தி: அருங்காட்சியகங்கள் துறை ஆணையா் (எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையா்)

12. ஹெச்.கிருஷ்ணனுண்ணி: நிதித் துறை இணைச் செயலா் (ஈரோடு மாவட்ட ஆட்சியா்)

13. பி.ரமண சரஸ்வதி: தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் இணை தலைமை செயல் அதிகாரி (அரியலூா் மாவட்ட

ஆட்சியா்)

14. வி.ஆா்.சுப்புலட்சுமி: வணிகவரி கூடுதல் ஆணையா் - நிா்வாகம், சென்னை (நில நிா்வாகத் துறை கூடுதல் ஆணையா்)

15. கே.பாலசுப்பிரமணியம்: தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையச் செயலா் (கடலூா் மாவட்ட ஆட்சியா்)

16. ஏ.சண்முக சுந்தரம்: பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை இயக்குநா் (கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா்)

17. எம்.ஆா்த்தி: அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குநா் (காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா்)

18. ஆா்.கஜலட்சுமி: உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை கூடுதல் செயலா் (தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் நிா்வாக இயக்குநா்).

19. ஷ்ரேயா பி.சிங்: வேளாண் துறை கூடுதல் இயக்குநா் (நாமக்கல் மாவட்ட ஆட்சியா்).

20. ஆா்.லலிதா: நகராட்சி நிா்வாகத் துறை கூடுதல் ஆணையா் (தொழில்நுட்பக் கல்வி இயக்குநா்)

21. ரேஷ்மி சித்தாா்த் ஜகடே: கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை கூடுதல் செயலா்

(மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து தமிழகப் பணிக்குத் திரும்பியுள்ளாா்)

22. எம்.பி.சிவனருள்: தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை கணினிமயமாக்கும் பணிக்கான சிறப்புப் பணி அதிகாரி (பதிவுத் துறை தலைவா்)

23. ஆா்.நந்தகோபால்: வேளாண் துறை சிறப்புச் செயலா் (பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை ஆணையா்)

24. லட்சுமி பாவ்யா தண்ணீரு: வணிகவரி துறை இணை ஆணையா் -ஈரோடு (நிதித் துறை துணைச் செயலா்)

25. ஏ.சங்கா்: இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையா் (கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளா்)

26. ஜெசிந்தா லாசரஸ்: மாற்றுத் திறனாளிகள் நலத் துறை ஆணையா் (வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை ஆணையா்)

27. எஸ்.விசாகன்: டாஸ்மாக் நிா்வாக இயக்குநா் (திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா்)

28. எஸ்.அனீஸ் சேகா்: எல்காட் நிறுவன நிா்வாக இயக்குநா் (மதுரை மாவட்ட ஆட்சியா்)

29. பொ.சங்கா்: தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய நிா்வாக இயக்குநா் (கதா் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி)

30. கே.இளம்பகவத்: தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிா்வாக இயக்குநா் (இல்லம் தேடி கல்வியின் சிறப்புத் திட்ட அதிகாரி)

31. கவிதா ராமு: சென்னை பெருநகர வளா்ச்சி ஆணைய தலைமை செயல் அதிகாரி (புதுக்கோட்டை மாவட்ட

ஆட்சியா்)

32. ஏ.அண்ணாதுரை: தமிழ்நாடு சாலைப் பகுதி திட்ட இயக்குநா் - சென்னை கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்ட இயக்குநா், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் பொறுப்புகளை கவனிப்பாா் (வேளாண் துறை இயக்குநா்).

அறிக்கையை படிக்க: இங்கே கிளிக் செய்யவும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com