விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தஞ்சாவூர் அருகே அரசுப் பேருந்து - லாரி மோதல்: 7 பேர் படுகாயம்

தஞ்சாவூர் அருகே அரசுப் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.

News image

அதிராம்பட்டினத்தில் பேருந்து - லாரி மோதல்

Updated On :1 நவம்பர் 2023, 7:23 am

DIN

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே  அரசுப் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பேருந்து ஓட்டுநர், நடத்துனர் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.

திருக்கானூர்பட்டி நால் ரோடு பகுதியில் வல்லம் செல்லும்  சாலையில், பார்சல் லாரி வேகமாக சாலையை கடக்கும் போது, புதுக்கோட்டையில் இருந்து தஞ்சை நோக்கி வந்த அரசுப் பேருந்து திடீரென லாரி மீது மோதியதாக கூறப்படுகிறது.

இதில் லாரி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியில் இருந்த பார்சல்கள் சாலையில் சிதறின. மேலும் லாரியின் டீசல் டேங்க் உடைந்து சாலையில் டீசல் ஓடியது.

Story image

அதே போல் லாரியில் மீது மோதிய  அரசு பேருந்தும் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் பக்கவாட்டில் இருந்த சுவரில் மோதி நின்றது. இதில் பேருந்து முன்பகுதி சேதமடைந்தது.  

இந்த விபத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் வினோதன், நடத்துநர் கார்த்திகேயன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். பயணிகள் 5 பேரும் காயமடைந்தனர்.

இந்த விபத்தைக் கண்ட அருகில் இருந்தவர்கள் பேருந்தில் இருந்த பயணிகளை மீட்டனர். தகவல் அறிந்த வல்லம் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு  வந்து போக்குவரத்தை சீர்செய்தனர்.

Story image

மேலும், விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.