/

தூத்துக்குடி பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை

தூத்துக்குடி வ உ சி சாலையில் உள்ள பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலக அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று மாலை திடீர் சோதனை மேற்கொண்டனர்.

News image
Updated On :1 நவம்பர் 2023, 3:55 pm

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடி வ உ சி சாலையில் உள்ள பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலக அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று மாலை திடீர் சோதனை மேற்கொண்டனர்.

Story image

மாவட்ட  லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி பீட்டர் பால்  தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட போலீஸார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையின் போது  கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 37ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறதால் அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.