
ராமநாதபுரம்: தமிழ்நாட்டின் ராமேசுவரம் அக்னிதீர்த்தம் கடலில் வியாழக்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மிதந்து வந்ததை பார்த்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கடலோர பாதுகாப்பு குழு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அடையாளம் தெரியாத பெண்ணின் உடலை கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
அந்த பெண் "கேரளாவைச் சேர்ந்தவராகக் கருதப்படுவதாகவும், அதிகாலையில் கடலில் புனித நீராடும்போது இறந்திருக்கலாம். மேலும் சடலம் வேறு பகுதியில் இருந்து கரைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கலாம்" என்று போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிக்க | ஏழைகளின் கைகளில் அதிகாரம் செல்வதை பிரதமா் விரும்பவில்லை: காா்கே
இது தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் மேலும் தெரிவித்தனர்.
அக்னிதீர்த்தம் என்பது தமிழ்நாட்டின் ராமேசுவரத்தில் உள்ள ஒரு கடற்கரையாகும். இது ராமநாதசுவாமி கோயிலுக்கு கிழக்கே அமைந்துள்ளது.
அக்னிதீர்த்தம் என்பது இந்துக்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த யாத்திரையாகும். இது ஒரு புனிதமான இடம் மற்றும் வங்காள விரிகுடாவின் அக்னிதீர்த்தத்தில் நீராடினால் வாழ்நாளில் செய்த பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.