நிலத்திலும் நீரிலும் செல்லும் ரோவர் கிராஃப்ட் சோதனை ஓட்டம்: கோவை தனியார் நிறுவனம் அசத்தல்

நாட்டிலேயே முதல் முறையாக நீரிலும் நிலத்திலும் செல்லும் வகையில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பில் ரோவர் கிராப்ட் படகு ஒன்றை கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் தயாரித்துள்ளது.
நீரிலும் நிலத்திலும் இயங்கும் ரோவர் கிராஃப்ட் படகு
நீரிலும் நிலத்திலும் இயங்கும் ரோவர் கிராஃப்ட் படகு
Published on
Updated on
1 min read


நாட்டிலேயே முதல் முறையாக நீரிலும் நிலத்திலும் செல்லும் வகையில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பில் ரோவர் கிராப்ட் படகு ஒன்றை கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் சோதனையோட்டம் சூலூரில் உள்ள சின்ன குளத்தில் தீயணைப்புத் துறை மற்றும் மீட்புப் படையினர் பாதுகாப்புடன் புதன்கிழமை வெற்றிகரமாக நடைபெற்றது. 

கோவை மாவட்டம், சூலூர் அடுத்த ராவத்தூர் பகுதியைச் சேர்ந்த யூரோடெக் சொல்யூஷன் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் ட்ரில்லிங் மெஷின், கிரைண்டிங் மெஷின் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களை தயாரித்து 45-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், நாட்டிலேயே முதல் முறையாக நீரிலும் நிலத்திலும் இயங்கும் வகையில் ரோவர் கிராஃப்ட் படகு ஒன்றை தயாரித்துள்ளது. இதன் சோதனையோட்டம் சூலூரில் உள்ள சின்ன குளத்தில் தீயணைப்புத் துறை மற்றும் மீட்புப் படையினர் பாதுகாப்புடன் புதன்கிழமை நடைபெற்றது. 

இது குறித்து யூரோடெக் சொல்யூஷன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், கனடா நாட்டை சார்ந்த தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் பைலட் சுப்ரதா சந்திரசேகர் கூறுகையில், நாட்டிலேயே முதல்முறையாக நீர் மற்றும் நிலத்தில் இயங்கும் வகையில் ஓவர் கிராஃப்ட் படகை தயாரித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது 20 முதல் 25 கிலோ மீட்டர் வேகத்தில் சோதனையோட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது‌. 

நீர் மற்றும் நிலத்தில் அதிகபட்சமாக 80 கிலோ மீட்டர் வேகத்திலும் பனி படர்ந்த இடங்களில் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் செல்லும் வகையில் இந்த ரோவர் கிராஃப்ட் படகு வடிவமைக்கப்பட்டுள்ளது. 

கனடாவை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ரோவர் கிராஃப்ட், புயல் வெள்ளம் உள்ளிட்ட பாதிப்பு பகுதிகளில் மீட்பு நடவடிக்கைக்காகவும், கடலோர பாதுகாப்பு மற்றும் கப்பற்படையின் கண்காணிப்பு பணிகளுக்காகவும், அவசர காலங்களில் மருத்துவ தேவைக்காகவும் பயன்படுத்த முடியும். 

வெயில் மழை மற்றும் புயல் என அனைத்து கால நிலையிலும் பேரிடர் காலங்களிலும் இந்த ரோவரை தடையின்றி எளிதாக பயன்படுத்த முடியும். 

ஒரு மணி நேரத்திற்கு 20 முதல் 25 லிட்டர் வரை எரிபொருள் செலவாகும்.

பொருளாதார வர்த்தகத்தை கடந்து பொதுமக்களின் தேவைக்காகவும் சேவைக்காகவும் இதனை வடிவமைத்து இருப்பதாக தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com