நூலிழையில் தப்பிய மகள்.. பெற்றோர்களுக்கு வெங்கடேஷ் பட் அறிவுரை

தான் சந்தித்த விபத்து குறித்து விடியோ மூலம் பகிர்ந்துள்ள சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட், பெற்றோர்கள் கவனத்துடன் இருக்குமாறு அறிவுரை வழங்கியிருக்கிறார்.
நூலிழையில் தப்பிய மகள்.. பெற்றோர்களுக்கு வெங்கடேஷ் பட் அறிவுரை


சென்னை வேளச்சேரியில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் தான் சந்தித்த விபத்து குறித்து விடியோ மூலம் பகிர்ந்துள்ள சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட், பெற்றோர்கள் கவனத்துடன் இருக்குமாறு அறிவுரை வழங்கியிருக்கிறார்.

சமையல் கலைஞராகவும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாகவும் அதிகம் புகழ்பெற்றவர் வெங்கடேஷ் பட். இவர் வெளியிட்ட விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகிறது.

அதில், வேளச்சேரியில் உள்ள பொழுதுபோக்கு அரங்குக்கு மகளுடன் சென்றேன். அப்போது, மின் தூக்கியில் (எக்ஸ்லேட்டரில்) எனது மகளின் கால் செருப்பு சிக்கிக் கொண்டது. நான் சரியான நேரத்தில் சுதாரித்துக்கொண்டு என் மகளை இழுத்ததால், அவள் கால் சிக்கிக்கொள்ளாமல் தப்பியது. அவள் அணிந்திருந்த செருப்பின் முன்பக்கம் முழுவதும் எஸ்கலேட்டரில் சிக்கி சிதைந்துவிட்டது. இந்த விபத்த நடந்தபோது, கீழே இருந்த யாரும் எஸ்கலேட்டரை நிறுத்தவில்லை. நல்லவேளை இதோடு போய்விட்டது. இது மிகவும் கவலைதரும் விஷயம். இந்த அளவுக்கு தடிமனான செருப்பையே அந்த எஸ்கலேட்டர் சிதைத்துவிட்டது. இது குறித்து நிர்வாகத்திடம் புகார் அளித்துள்னேன்.

இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறியிருக்கிறார்கள். எனவே, குழந்தைகளை இதுபோன்ற பொழுதுபோக்கு அரங்குகளுக்கு அழைத்துச் செல்லும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும். யாருக்கும் இதுபோன்று நடந்துவிடக் கூடாது என்று பெற்றோருக்கும் அறிவுரை அளித்துள்ளார்.

இது குறித்து நிர்வாகம் தரப்பில் கூறுகையில், இந்த பிரச்னை எப்படி நடந்தது என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இனி இதுபோல நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com