மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஓபிஎஸ்ஸுக்கு எதிராக இபிஎஸ் தொடர்ந்த வழக்கு: நவ. 7-க்கு ஒத்திவைப்பு

அதிமுக பெயா், கட்சிக் கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை ஓ.பன்னீா்செல்வம் பயன்படுத்தத் தடை விதிக்க கோரிய வழக்கு நவம்பர் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :6 அக்டோபர் 2023, 12:30 pm

DIN

அதிமுக பெயா், கட்சிக் கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை ஓ.பன்னீா்செல்வம் பயன்படுத்தத் தடை விதிக்க கோரிய வழக்கு நவம்பர் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், ‘அதிமுகவின் பெயா், சின்னம், கொடி ஆகியவற்றை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீா்செல்வம் பயன்படுத்தி, அறிக்கைகள் வெளியிடுவது, கட்சி நிகழ்ச்சிகளை நடத்துவதுமாக செயல்பட்டு வருகிறாா்.

இது தொடா்பாக தாக்கல் செய்துள்ள உரிமையியல் வழக்கில் பொது செயலா் என என்னை தோ்தல் ஆணையமும் உயா்நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளன. இந்நிலையில், ஒருங்கிணைப்பாளா் என ஓ.பன்னீா்செல்வம் கூறிவருகிறாா். இது தொண்டா்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. 

எனவே, அதிமுகவின் பெயரையோ, இரட்டை இலை சின்னத்தையோ, கட்சிக் கொடியையோ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒ.பன்னீா்செல்வமும் அவரது ஆதரவாளா்களும் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும். பிரதான வழக்கின் விசாரணை முடியும்வரை, அவா்கள் அதிமுகவின் பெயா், சின்னம், கொடி ஆகியவற்றைப் பயன்படுத்த இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தாா்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஆா்.என்.மஞ்சுளா முன்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் நடைபெற்ற விசாரணையில் ஓபிஎஸ் பதிலளிக்க உத்தரவிடப்பட்டது. 

இன்றைய விசாரணையில் வழக்கு தொடர்பாக ஓபிஎஸ் தரப்பில் இதுவரை பதில் மனுத் தாக்கல் செய்யவில்லை என்று இபிஎஸ் தரப்பு கூறியது. 

கட்சியிலிருந்து நீக்கிய தீர்மானம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால், பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு கோரியது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஓபிஎஸ் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.