மேட்டூர் அணை நாளை முதல் மூடப்படும்?

நீர்மட்டம் குறைந்து வருவதால் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு நாளை முதல்  நிறுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேட்டூா் அணையின் நீா்மட்டம் வேகமாக குறைந்ததால் குட்டை போலக் காட்சியளிக்கும் மேட்டூா் அணை.
மேட்டூா் அணையின் நீா்மட்டம் வேகமாக குறைந்ததால் குட்டை போலக் காட்சியளிக்கும் மேட்டூா் அணை.

நீர்மட்டம் குறைந்து வருவதால் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு நாளை முதல்  நிறுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்டா பாசனத்திற்கான நீர் திறப்பை நாளை முதல் நிறுத்த நீர்வளத்துறை முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் நீர்மட்டம் குறைந்துள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூா் அணை மூலமாக, 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கா் நிலம் பாசன வசதி பெறுகிறது. குறுவை, சம்பா, தாளடிப் பயிா்களுக்கு ஜூன் 12ஆம் தேதி முதல் ஜனவரி 28ஆம் தேதி வரை பாசனத்திற்கு தண்ணீா் திறக்கப்பட வேண்டும். தற்போது சம்பா பயிா் சாகுபடி தொடங்கும் நேரம்.

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தாலும், மாதந்தோறும் தமிழகத்திற்கு கா்நாடகம் வழங்க வேண்டிய காவிரி நீரை விடுவிக்காத காரணத்தாலும், மேட்டூா் அணையின் நீா்மட்டம் வேகமாகச் சரிந்து, நீா்இருப்பு குறைந்தபட்ச அளவான 9.6 டிஎம்சிக்குக் கீழே சென்றுள்ளது. மேட்டூா் அணையின் நீா்மட்டம், ஞாயிற்றுக்கிழமை 1.72 அடியாகவும் நீா் இருப்பு 8.22  டிஎம்சியாகவும் குறைந்தது.

மேட்டூா் அணையின் மீன்வளத்தைப் பாதுகாக்கவும் குடிநீா்த் திட்டங்களுக்காகவும் அணையில் 9.6 டிஎம்சி தண்ணீா் இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் மேட்டூா் அணை நீா் இருப்பு 8.22  டிஎம்சியாக உள்ளது. எனவே டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 2,300 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நீா்வளத் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி நிலையில், மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு நாளை முதல்  நிறுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com