மெட்ரோ சுரங்கம் தோண்டும் இயந்திரங்களின் வேகம் என்ன?

சென்னையில் பல இடங்களில், மெட்ரோ ரயிலுக்கான சுரங்கங்கள் தோண்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதை வாகன ஓட்டிகள் பலரும் நன்றாகவே அறிந்திருப்பார்கள்.
மெட்ரோ சுரங்கம் தோண்டும் இயந்திரங்களின் வேகம் என்ன?


சென்னை: சென்னையில் பல இடங்களில், மெட்ரோ ரயிலுக்கான சுரங்கங்கள் தோண்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதை வாகன ஓட்டிகள் பலரும் நன்றாகவே அறிந்திருப்பார்கள்.

இத்தனை நாள்களாக சுரங்கம் தோண்டுகிறார்களா என்று அங்கலாய்த்துக் கொள்பவர்களும் உண்டு. ஏன் இத்தனை காலம் ஆகிறது இந்த சுரங்கம் தோண்டும் பணிகளுக்கு என்று சிந்தித்த போதுதான் பதில் கிடைத்துள்ளளது.

அதாவது சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் ஒரு நத்தையை விடவும் வேகம் குறைவாகத்தான் இயங்குகின்றனவாம். அதாவது, பாதுகாப்புக் கருதி, ஒரு நத்தையின் வேகத்தில் மூன்றில் ஒரு பங்கு வேகத்தில் இந்த இயந்திரங்கள் இயங்குவதே காரணமாம்.

தற்போது மாதவரம் - சிறுசேரி இடையேயான சுரங்கப் பாதைகளில் மூன்று இயந்திரங்கள் சுரங்கம் தோண்டும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. அதுபோல, அடையாறு சந்திப்புப் பகுதியிலும் மந்தைவெளியிலும் மூன்று சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் இயங்கி வருகின்றன. 

தலா மூன்று சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் ஈடுபட்டாலும், நாள் ஒன்றுக்கு தலா 7 முதல் 10 மீட்டர் தொலைவுக்கு மட்டுமே இங்கு சுரங்கம் தோண்டப்படுகிறது. சுரங்கம் தோண்டிய உடனேயே அந்த இயந்திரங்களை வெளியே எடுக்க முடியாததே காரணம் என்று கூறப்படுகிறது.

முதல் மெட்ரோ ரயில் திட்டத்தின் போதும், நாள் ஒன்றுக்கு 11 மீட்டர் அளவுக்குத்தான் சுரங்கம் தோண்டப்பட்டது. இந்த குறைந்த வேகம், திட்டப் பணியில் எந்த எதிர்மறைப் பிரச்னையும் ஏற்படுத்தவில்லை. அது, பெரிய அளவில் கட்டடங்களில் விரிசல்கள் ஏற்பட்டு பிரச்னை ஏற்படுவதிலிருந்து  காப்பாற்றவே செய்தது.

முன்பு, சுரங்கம் தோண்டுவதும், ரயில் நிலையப் பணிகளும் ஒரே நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பல்வேறு அடிபப்டை விஷயங்களுக்காக இரண்டு பணிகளும் தனித்தனி நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சுரங்கம் தோண்டும் பணிகள் மிக மெதுவாக நடைபெறுவதால் 116.1 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இரண்டாம் கட்டப் பணிகள் தாமதமாகாது, அது திட்டமிட்டபடி 2025 - 2028ஆம் ஆண்டுக்குள் முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com