பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரிகளில்  35க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் துணை ராணுவப் படை பாதுகாப்புடன் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் அமைந்துள்ள அரசு மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

Published On :

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் அமைந்துள்ள அரசு மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

சீர்காழி அருகே வடரங்கம், பட்டிய மேடு, பாலுறான் படுகை உள்ளிட்ட மூன்று இடங்களில் அரசு மணல் குவாரிகள் செயல்பட்டு வந்தன. மணல் எடுப்பதற்கான காலம் முடிந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக மணல் குவாரி செயல்படவில்லை. 

Story image

இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள மணல் குவாரிகளில் அமலாக்கத் துறையினர் அடுத்தடுத்து சோதனை நடத்தி வந்த நிலையில் இன்று சீர்காழி கொள்ளிடம் ஆற்றில் இயங்கி வரும் மூன்று இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

Story image

துணை ராணுவப்படை பாதுகாப்புடன் 35-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் மூன்று குழுக்களாகப் பிரிந்து வெவ்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

Story image

குறிப்பாக ஆற்றில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் எவ்வளவு ஆழம் மணல் எடுக்கப்பட்டுள்ளது  என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.