முழுமையான சமத்துவத்துக்கு இன்னும் உழைக்க வேண்டும்: பிரியங்கா
சென்னை ஒய்.எம்.சி.ஏ. திடலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மகளிர் உரிமை மாநாடு இன்று (அக். 14) நடைபெற்றது.


நாட்டில் முழுமையான சமத்துவம் பெற நாம் இன்னும் உழைக்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
சென்னை ஒய்.எம்.சி.ஏ. திடலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மகளிர் உரிமை மாநாடு இன்று (அக். 14) நடைபெற்றது.
திமுக எம்.பி. கனிமொழி முன்னிலையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, சுப்ரியா சூலே உள்பட இந்தியா கூட்டணியைச் சேர்ந்த பல பெண் தலைவர்கள் பங்கேற்றனர்.
இதில் பேசிய சோனியா காந்தி, நீங்கள்தான் என் தாய். நீங்கள்தான் என் சகோதரி. தமிழ்நாட்டில் இருப்பதை பெருமையாக உணர்கிறேன். பெண்கள் ஏன் அடிமையாகவே உள்ளனர் என்ற பெரியாரின் கேள்வி இப்போதும் நாட்டில் பொருந்துகிறது. சமூக மாற்றத்துக்கான புரட்சி தமிழ்நாட்டில்தான் உருவானது.
மாற்றத்துக்கான சரியான தளம் இப்போது உள்ளது. அந்த தளத்தில் அனைவரும் இப்போது இருக்கிறோம். முடிவெடுக்க வேண்டிய இடத்திலும் இருக்கிறோம்.
இந்திய மகளிர் இனி நேரத்தை வீணடிக்கக்கூடாது. பெண்கள் இடஒதுக்கீடு மசோதா உடனடியாக அமலுக்கு வர வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...