/

ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

News image
கோப்புப் படம்.
Updated On :16 அக்டோபர் 2023, 4:43 am

DIN

இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மண்டபம் மீனவர்கள் 27 பேருடன் 5 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் அண்மையில் சிறைபிடித்து சென்றனர். இந்த நிலையில் இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிடுக்கக் கோரி 800க்கும் மேற்பட்ட படகுகள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனிடையே ராமேஸ்வரம் மீனவர்களின் வேலை நிறுத்தப்போராட்டம் தேவையற்றது. மீனவர்கள் பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண வேண்டும். 

தமிழக மீனவர்கள் பிரச்னை தொடர்பாக இந்தியா-இலங்கை குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.