தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

லியோ படம் மிகப்பெரிய வெற்றி அடைய வாழ்த்துகள்: ரஜினிகாந்த்

லியோ படம் மிகப்பெரிய வெற்றி அடைய தனது வாழ்த்துகள் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :16 அக்டோபர் 2023, 11:57 am

DIN

லியோ படம் மிகப்பெரிய வெற்றி அடைய தனது வாழ்த்துகள் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்தின் 170ஆவது திரைப்படத்தின் படப்படிப்பு கேரளத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இந்நிலையில், பணகுடியிலுள்ள தனியாா் ஓடு உற்பத்தி தொழிற்சாலையில் 3 நாள்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருந்தது. அதன்படி, கேரளத்தில் படப்பிடிப்பை முடித்துவிட்டு ரஜினிகாந்த் கடந்த வாரம் கன்னியாகுமரி புறப்பட்டு சென்றார். அவரது வருகையை அறிந்ததும் ஏராளமான ரசிகர்கள் கூடினர்.

இருப்பினும் படப்பிடிப்பு தளத்தில், ரசிகா்கள் யாரையும் காவல்துறையினா் உள்ளே அனுமதிக்கவில்லை. அங்கு சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த புதிய படத்துக்கு இன்னும் பெயா் முடிவு செய்யப்படவில்லை என திரைப்பட துறை வட்டாரத்தில் தெரிவித்தனா். இந்த படத்துக்கு பிறகு நடிகர் ரஜினியின் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கும் அனிருத் இசையமைக்கிறார். 

இந்த நிலையில் லியோ படம் மிகப்பெரிய வெற்றி அடைய தனது வாழ்த்துகள் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து தூத்துக்குடி விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், புவனா ஒரு கேள்விகுறி படப்பிடிப்பிற்காக கடந்த 1977 ஆம் ஆண்டு தென் மாவட்டங்களுக்கு வந்திருக்கிறேன். அதன்பிறகு படப்பிடிப்பிற்காக இப்போதுதான் வருகிறேன். இங்குள்ள மக்கள் மிகவும் அன்பானவர்களாக உள்ளனர். ஆனால், அவர்களுடன் ஒரு புகைப்படம் எடுக்க முடியவில்லை என்பது எனக்கு வருத்தமாக உள்ளது. நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படம் வரும் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. அப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் என இறைவனை வேண்டுகின்றேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.