பௌா்ணமி கிரிவலம்: சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்

பௌா்ணமி கிரிவலம்: சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்

பௌா்ணமி கிரிவலத்தையொட்டி  பக்தா்களின் வசதிக்காக சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு அக். 28, 29 தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 
Published on

பௌா்ணமி கிரிவலத்தையொட்டி  பக்தா்களின் வசதிக்காக சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு அக். 28, 29 தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் திருக்கோயிலில் நடைபெறும் பௌா்ணமி கிரிவலத்தில் அதிகளவில் பக்தா்கள் கலந்துகொள்வார்கள். 

இதையொட்டி வருகிற சனிக்கிழமை பௌர்ணமி கிரிவலத்தையொட்டி பக்தா்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையிலும் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு அக். 28, 29 தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 

வரும் 28 ஆம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில், நள்ளிரவு 12.05க்கு சென்றடைகிறது. 

அதுபோல, திருவண்ணாமலையில் இருந்து அக். 29 ஆம் தேதி அதிகாலை 3.45 மணிக்கு புறப்படும் ரயில் சென்னை கடற்கரையை 9.05 மணிக்கு சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com