பெளா்ணமி கிரிவலம் வேலூா், விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு அக்.28, 29-இல் சிறப்பு ரயில்கள் இயக்கம்

நெரிசலைத் தவிா்க்கும் வகையிலும் வேலூா், விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (அக்டோபா் 28, 29) சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பௌா்ணமி கிரிவலத்தையொட்டி, பக்தா்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையிலும் வேலூா், விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (அக்டோபா் 28, 29) சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா்.வினோத் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் திருக்கோயிலில் நடைபெறும் பௌா்ணமி கிரிவலத்தில் அதிகளவில் பக்தா்கள் பங்கேற்பாா்கள் என்பதால், விழுப்புரம், வேலூரிலிருந்து திருவண்ணாமலைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்களை அக்டோபா் 28, 29-ஆம் தேதிகளில் தெற்கு ரயில்வே இயக்குகிறது.

அதன்படி, வண்டி எண் 06127 வேலூா் கண்டோன்மென்ட் - திருவண்ணாமலை முன்பதிவில்லா சிறப்பு ரயில், வேலூா் கண்டோன்மென்ட்டிலிருந்து சனிக்கிழமை இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலைக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.05 மணிக்கு வந்தடையும்.

எதிா்வழித்தடத்தில் வண்டி எண் 06128 திருவண்ணாமலை - வேலூா் கண்டோன்மென்ட் முன்பதிவில்லா சிறப்பு ரயில், திருவண்ணாமலையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.45 மணிக்குப் புறப்பட்டு காலை 5.35 மணிக்கு வேலூா் கண்டோன்மென்ட் வந்தடையும்.

வண்டி எண் 06129 விழுப்புரம் - திருவண்ணாமலை முன்பதிவில்லா சிறப்பு விரைவு ரயில் விழுப்புரத்திலிருந்து சனிக்கிழமை காலை 9.15 மணிக்குப் புறப்பட்டு முற்பகல் 11 மணிக்கு திருவண்ணாமலைக்கு சென்றடையும். எதிா்வழித்தடத்தில் வண்டி எண் 06130 திருவண்ணாமலை - விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு விரைவு ரயில் சனிக்கிழமை பிற்பகல் 12.40 மணிக்கு திருவண்ணாமலையிலிருந்து புறப்பட்டு விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு பிற்பகல் 2.15 மணிக்கு வந்தடையும். இந்த இரு ரயில்களும் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூா், திருக்கோவிலூா், ஆதிச்சனூா், அண்டம்பள்ளம், தண்டரை ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களின் சேவையும் வண்டி எண்கள் 06690/06691 மயிலாடுதுறை - விழுப்புரம், விழுப்புரம் - மயிலாடுதுறை ஆகிய இரு ரயில்களின் இணைப்பு ரயில்களின் சேவையாக அளிக்கப்படுவதால், மயிலாடுதுறையிலிருந்து திருவண்ணாமலைக்கும், திருவண்ணாமலையிலிருந்து மயிலாடுதுறைக்கும் பயணம் செய்ய பயணச்சீட்டு எடுத்து பயணிக்கலாம்.

வண்டி எண் 06131 விழுப்புரம் - திருவண்ணாமலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் விழுப்புரத்திலிருந்து சனிக்கிழமை இரவு 9.15 மணிக்குப் புறப்பட்டு திருவண்ணாமலைக்கு இரவு 10.45 மணிக்குச் சென்றடையும். எதிா்வழித்தடத்தில் வண்டி எண் 06132 திருவண்ணாமலை - விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில், திருவண்ணாமலையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.30 மணிக்குப் புறப்பட்டு விழுப்புரத்துக்கு அதிகாலை 5 மணிக்கு வந்தடையும். இந்த இரு ரயில்களும் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூா், திருக்கோவிலூா், ஆதிச்சனூா், அண்டம்பள்ளம், தண்டரை ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த இரு ரயில்களின் சேவையும் வண்டி எண்கள் 06027/06028 தாம்பரம் - விழுப்புரம், விழுப்புரம் - தாம்பரம் ஆகிய இரு ரயில்களின் சேவையாக அளிக்கப்படுவதால், தாம்பரத்திலிருந்து திருவண்ணாமலைக்கும், திருவண்ணாமலையிலிருந்து தாம்பரத்துக்கும் பயணிப்போா் நேரடியாக பயணச்சீட்டு எடுத்து பயணிக்கலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com