தமிழகம் மிக அமைதியான மாநிலம்: டிஜிபி சங்கர் ஜிவால்

தமிழகம் மிக அமைதியான மாநிலம் என்று காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
சங்கர் ஜிவால் (கோப்புப் படம்)
சங்கர் ஜிவால் (கோப்புப் படம்)


சென்னை: தமிழகம் மிக அமைதியான மாநிலம் என்று காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குறித்து சென்னையில் இன்று காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

அப்போது பேசிய அவர், தமிழகம் மிக அமைதியான மாநிலமாக உள்ளது என்றார். மேலும், சென்னை பாதுகாப்பான நகரம் என ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது என்றும் கூறினார்.

டிஜிபி சங்கர் ஜிவால் மேலும் பேசுகையில், ஆளுநர் மாளிகையில் எந்த பாதுகாப்புக் குறைபாடும் இல்லை. 253 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் உள்ளனர். விஷமிகள் சிலர் உள்ளே நுழைய முயற்சித்ததாக ஆளுநர் மாளிகை தரப்பில் கூறப்படுவது தவறு. சம்பவத்தில் ஈடுபட்ட நபருக்கு அரசியல் பின்னணி உள்ளதா என்பதை இப்போதைக்குத் தெரிவிக்க முடியாது.

மேலும், ரௌடி கருக்கா விநோத் ஆளுநர் மாளிகை பகுதியில் தனியாக நடந்து வந்ததாகவும் அவருடன் யாரும் வரவில்லை என்றும் காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். ஆளுநர் மாளிகைக்குள் விஷமிகள் சிலர் உள்ளே நுழைய முயற்சித்ததாக ஆளுநர் மாளகை தரப்பில் கூறப்படுவது உண்மையில்லை என்பதை காட்டும் காண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளையும் காவல்துறையினர் வெளியிட்டனர்.

ஆளுநர் மயிலாடுதுறை சென்றபோது, கம்புகள், போன்றவற்றால் தாக்க முயன்றதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை. தருமபுரத்துக்கு ஆளுநர் ரவி சென்ற போது பதிவான விடியோவை வெளியிடு காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. மேலும், மயிலாடுதுறையில் நடந்த சம்பவம் தொடர்பாக விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும், பெட்ரோல் குண்டு வீச்சு தொர்பாக, ஆளுநர் மாளிகை சார்பில் புகார் அளிக்கப்பட்டவுடன் 73 பேர் கைது செய்யப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com