தமிழகத்தில் பாஜக நிர்வாகிகள் மீதான காவல் துறை நடவடிக்கை எடுத்தது தொடர்பாக, சென்னை வந்துள்ள பாஜக குழு இன்று ஆய்வு மேற்கொள்கிறது.
2 நாள்கள்பயணமாக தமிழகம் வந்துள்ள பாஜக ஆய்வு குழு, நேற்று ஆலோசனை மேற்கொண்ட நிலையில், இன்று ஆய்வு மேற்கொள்கிறது. பாஜக நிர்வாகிகள் அமர்பிரசாத் ரெட்டி, எஸ்.ஜி. சூர்யா, சுரேந்தர் குமார், வினோத் குமார் வீடுகளில் இன்று விசாரணை மேற்கொள்கிறது.
செங்கல்பட்டு மாவட்டம் பனையூரில் தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை வீட்டின் முன்பு இருந்த கொடிக் கம்பத்தை காவல் துறையினர் வெள்ளிக்கிழமை(அக்.20) இரவில் அகற்றினா். இதைத் தொடா்ந்து காவல் துறையினருக்கும், பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அப்போது காவல் துறையினருடன் ஏற்பட்ட மோதல் தொடா்பாக தமிழக பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவுத் தலைவா் அமா்பிரசாத் ரெட்டி உள்பட 13 போ் கைது செய்யப்பட்டனா். இதே போன்று, சமூகஊடகங்களில் திமுக அரசை விமா்சனம் செய்து பதிவிடும் பாஜகவினரை காவல் துறையினர் அவ்வப்போது கைது செய்து வருகின்றனா்.
பாஜகவினருக்கு சட்டப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் குழு ஒன்றை பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா அறிவித்தார். அந்தக் குழுவில், கா்நாடக முன்னாள் முதல்வா் சதானந்த கெளடா, எம்.பி. சத்ய பால் சிங், ஆந்திர பாஜக தலைவா் புரந்தேஸ்வரி, பி.சி. மோகன் எம்.பி. ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.
இந்நிலையில், சென்னை வந்துள்ள பாஜக குழு இன்று ஆய்வு மேற்கொண்டு, தமிழக அரசு பாரபட்சமாக நடந்து கொள்கிறதா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை பாஜக தலைமையிடம் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொடர்ந்து குறையும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்!
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை விரும்பும் மக்கள்: திருமாவளவன் கருத்து!

புதிய வரலாறு! திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் அதிமுக வெற்றி!
4 தொகுதிகளில் வெற்றி... தமிழக மக்களுக்கு நன்றி: அன்புமணி இராமதாஸ் அறிக்கை!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


