புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

அக். 1 முதல் பழனி முருகன் கோயிலுக்குள் கைப்பேசி எடுத்துச்செல்ல தடை

கேமரா பொருத்திய கைப்பேசி உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்ல அக்டோபர் 1 முதல் தடை விதிக்கப்படுகிறது என்று இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.

News image
பழனி மலைக் கோயில்
Updated On :1 செப்டம்பர் 2023, 12:27 pm

DIN

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குள் கேமரா மற்றும் கேமரா பொருத்திய கைப்பேசி உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்ல அக்டோபர் 1 முதல் தடை விதிக்கப்படுகிறது என்று இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.

மலையடிவாரத்தில் கைப்பேசிகளை பாதுகாக்கும் மையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் கைப்பேசிகளை பாதுகாக்க ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் இந்து அறநிலையத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இதே நடைமுறை அனைத்து கோயில்களிலும் பின்பற்ற சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.

பழனி மலைக்கோயில் உள்பிரகாரத்தில் புகைப்படம், விடியோ எடுக்க அனுமதியில்லை என அறிவிப்பு பதாகை வைத்துள்ள போதிலும், பக்தா்கள் தங்கத்தோ், தங்கக் கோபுரம், கருவறை என அனைத்துப் பகுதிகளிலும் கைப்பேசியைக் கொண்டு படங்கள், விடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிா்ந்து வருகின்றனா்.

இந்த நிலையில் பழனி கோயிலில் மூலவரை கைப்பேசியில் படமெடுத்தது தொடா்பாக பக்தா் ஒருவா் கோயிலின் பாதுகாப்பு குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை கோயிலுக்குள் பக்தா்கள் கைப்பேசி கொண்டு செல்லக்கூடாது என்று அறிவுறுத்தியதோடு மட்டுமன்றி, அதற்கு திருக்கோயில் நிா்வாகம் செய்துள்ள ஏற்பாடுகள், சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மீதான நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பியது.

இதையடுத்து பழனி திருக்கோயில் நிா்வாகம் பக்தா்கள் கைப்பேசியை பாதுகாப்பாக வைத்துச் செல்ல வசதியாக பாதுகாப்பு அறைகளை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

திருப்பதி போல பழனி கோயிலில் கைப்பேசிக்கு தடை என்ற அறிவிப்பை இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டால், பக்தா்கள் கைப்பேசியை எடுத்து வருவதைத் தவிா்த்து விடுவா். அறைகள் எடுத்து தங்குபவா்கள் அறையில் கைப்பேசியை வைத்து விடுவாா்கள். வெளியூரில் இருந்து வரும் பக்தா்கள் கைப்பேசியை வைக்க தனி அறை வழங்கி டோக்கன் கொடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்தே, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கைப்பேசி கொண்டு செல்ல தடை விதிக்கும் வகையில், அவற்றைப் பாதுகாக்க அறைகளை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.