தூத்துக்குடி உசிலம்பட்டி பள்ளியில் பட்டியலின பெண் சமைத்ததால் மாணவர்கள் சாப்பிட மறுத்த விவகாரத்தில் திமுக எம்.பி. கனிமொழி இன்று அந்த பள்ளிக்குச் சென்று மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் , எட்டயபுரம் அருகே உசிலம்பட்டி கிரமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு 11 மாணவ- மாணவிகள் படிக்கின்றனர்.
இங்கு கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல்வரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் இத்திட்டத்தின் சமையலராக உசிலம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பட்டியலின சமூகத்தைச் சோ்ந்த முனிய செல்வி (29) என்பவா் பணியாற்றி வருகிறாா்.
இவர் பட்டியலினத்தவர் என்பதால் அவர் சமைத்த உணவை சாப்பிடக்கூடாது என்று மாணவர்களின் பெற்றோர்கள் வற்புறுத்தியுள்ளனர். இதனால் 2 மாணவர்கள் மட்டுமே உணவு சாப்பிட்டுள்ளனர். அதில் ஒருவர் முனிய செல்வியின் மகன்.
இதுகுறித்து செல்வி அளித்த தகவலின்பேரில், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியா், எட்டயபுரம் வட்டாட்சியா் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினா் பள்ளிக்கு சென்று பெற்றோா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
மேலும் சமூக நலன்- மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதா ஜீவனும் பள்ளிக்கு நேரடியாக சென்று விசாரித்தார்.
இந்நிலையில் திமுக எம்.பி. கனிமொழி இன்று(செவ்வாய்க்கிழமை) காலை பள்ளிக்கு நேரில் சென்று மாணவர்களுக்கு காலை உணவை பரிமாறி தானும் அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். அமைச்சர் கீதா ஜீவனும் அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். மேலும் சமையலர் முனிய செல்வியிடனும் கனிமொழி பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சமந்தாவிற்கு கைகொடுத்ததா அதிரடி ஆக்ஷன்? எங்கள் தங்கம் திரை விமர்சனம்
இன்றைய செய்திகள் ஜூன் 19 - நேரலை!

ஃபிஃபா ஆடவர் உலகக் கோப்பை வரலாற்றில் மீண்டும் பெண் நடுவர்கள்!

ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம்
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK


