செவிலியர்களுக்கு 4 நாள்களுக்கு மேல் விடுப்பு இல்லை: புதுச்சேரி அரசு அதிரடி!

புதுச்சேரியில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்கள் நான்கு நாள்களுக்கு மேல் விடுப்பு எடுக்கக்கூடாது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புதுச்சேரியில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்கள் நான்கு நாள்களுக்கு மேல் விடுப்பு எடுக்கக்கூடாது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில், 

புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைகளில் செவிலியர் பற்றாக்குறை நிலவுவதால் நான்கு நாள்களுக்கு மேல் செவிலியர்கள் விடுமுறை எடுக்க அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக செவிலியர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. 

இந்த நிலையில், புதுச்சேரியில் மாதத்தில் 4 நாள்களுக்கு மேல் விடுப்பு எடுக்க அரசு மருத்துவமனை செவிலியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

4 நாள்களுக்கு மேல் விடுப்பு தேவையெனில், மருத்துவ வாரிய அதிகாரிகள் முன்பு ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com