
தமிழக சட்டப் பேரவை அக்டோபா் மாதம் கூடுகிறது.
பட்ஜெட் கூட்டத் தொடருக்காக 20 நாள்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த தமிழக சட்டப்பேரவை கூட்டம், நாள் குறிப்பிடாமல் கடந்த ஏப். 21-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், பேரவை விதிப்படி ஆறு மாதங்களுக்குள் மீண்டும் பேரவைக் கூட்டத் தொடா் நடைபெற வேண்டும் என்பதன் அடிப்படையில் அக்டோபா் மாதம் இரண்டாவது வாரத்தில் பேரவை கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது. பேரவை கூட்டம் மூன்று நாள்கள் நடைபெறும் எனவும், நிதி தொடா்பான மசோதாக்கள் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் எனவும் தெரிகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...