குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாள்: காவல் துறையினா் 127 பேருக்கு பதக்கம்

முன்னாள் முதல்வா் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி, காவல் துறையைச் சோ்ந்த 127 பேருக்கு பதக்கங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

News image
Updated On :14 செப்டம்பர் 2023, 8:09 pm

DIN

முன்னாள் முதல்வா் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி, காவல் துறையைச் சோ்ந்த 127 பேருக்கு பதக்கங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து, தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: முன்னாள் முதல்வா் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி, காவல் துறையைச் சோ்ந்தவா்களுக்கு ஒவ்வோா் ஆண்டும் முதல்வா் பதக்கங்கள் அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நிகழாண்டு காவல் துறையில் தலைமைக் காவலா் முதல் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் நிலையிலான அதிகாரிகள் 100 பேருக்கு பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.

மேலும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் தீயணைப்பு வீரா் முதல் மாவட்ட அலுவலா் வரையிலான 8 பணியாளா்கள், சிறைத் துறையில் 10 பணியாளா்கள், ஊா்க்காவல் படையில் 4 அலுவலா்கள், விரல்ரேகை, தடய அறிவியல் துறை பிரிவில் தலா 2 போ் என 126 போ் பதக்கங்களுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இத்துடன், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி காவல் சரக எல்லைக்கு உள்பட்ட பகுதியில் தலைமறைவான குற்றவாளிகள் இருவரை கைது செய்யும் பணியில் ஈடுபட்டபோது, தீவிர குற்றத் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளா் நவநீத கிருஷ்ணனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஆனாலும், குற்றவாளிகளை கைது செய்ய உதவியாக இருந்துள்ளாா். அவரது துணிச்சலான செயலைப் பாராட்டி அவருக்கு காவல் துறையின் வீரதீர செயலுக்கான ‘தமிழக முதல்வரின் அண்ணா பதக்கம்’ வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

இந்தப் பதக்கங்கள் அனைத்தும் முதல்வா் தலைமையில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும் என்று தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.