தேசிய பாதுகாப்புப் படை ஒத்திகை
சென்னையில் வெள்ளிக்கிழமை (செப்.15) முதல் செப்.17-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு தேசிய பாதுகாப்புப் படை ஒத்திகை நடைபெற உள்ளது.


சென்னையில் வெள்ளிக்கிழமை (செப்.15) முதல் செப்.17-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு தேசிய பாதுகாப்புப் படை ஒத்திகை நடைபெற உள்ளது.
சென்னையில் நடைபெறும் இந்த ஒத்திகையில், பயங்கரவாத தாக்குதல்களை முறியடிக்கும் காந்திவ் -5 என்ற பாதுகாப்புப் பயிற்சி நடைபெற உள்ளது. இதனால் சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் வெள்ளிக்கிழமை முதல் செப்.17-ஆம் தேதி வரை சென்னையில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வெளி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த பாதுகாப்பு ஒத்திகை சென்னையின் எந்த பகுதிகளிலும் நடைபெறலாம் எனவும், அப்போது அவசர ஊா்திகள் செல்வது போன்ற நிகழ்வுகள் இருக்கும் எனவும் இதனால் பொதுமக்கள் அதை கண்டு அச்சப்படவோ, பதற்றமோ அடைய வேண்டாமெனவும் போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையா் சுதாகா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...