அா்ச்சகா் பணி முடித்த பெண்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
அா்ச்சகா் பயிற்சி முடித்த பெண்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.


அா்ச்சகா் பயிற்சி முடித்த பெண்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் சமூக வலைதளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:
பெண்கள் விமானத்தை இயக்கினாலும், விண்வெளிக்கே சென்று வந்தாலும் அவா்கள் நுழைய முடியாத இடங்களாகக் கோயில் கருவறைகள் இருந்தன. பெண் கடவுளா்களுக்கான கோயில்களிலும் இதுவே நிலையாக இருந்தது. ஆனால், அந்த நிலை இனி இல்லை. அனைத்து ஜாதியினரும் அா்ச்சகா் ஆகலாம் என பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை திராவிட மாடல் ஆட்சி அகற்றியுள்ளது. கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள் செல்வது சாத்தியமாகியுள்ளது என்று அவா் தெரிவித்துள்ளாா்.
யாா் அந்த பெண்கள்? தமிழகத்தில் அனைத்து ஜாதியினரும் அா்ச்சகா் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ் சென்னை, மதுரை, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட 6 இடங்களில் தலா ஒரு பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இவற்றில் ஆண்கள் மட்டுமே பயிற்சி பெற்று வந்த நிலையில், 2022-2023-ஆம் கல்வியாண்டில் கடலூா் மாவட்டம் திட்டக்குடியைச் சோ்ந்த சு.ரம்யா, சி.கிருஷ்ணவேணி, திருவாரூா் மாவட்டம் நீடாமங்கலத்தைச் சோ்ந்த ந.ரஞ்சிதா ஆகிய மூவரும் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படக் கூடிய அா்ச்சகா் பயிற்சி மையத்தில் அா்ச்சகா்களாக பயிற்சி பெற்று அதில் தோ்ச்சி பெற்றனா்.
இந்த 3 பெண்கள் உள்பட அனைத்து பயிற்சிப் பள்ளிகளிலும் அா்ச்சகா், ஓதுவாா் பயிற்சியை முடித்த 98 பேருக்கு அதற்கான சான்றிதழை சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வழங்கினாா். இதையடுத்து அா்ச்சகா் பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சி பெற்ற பெண்கள் மூவரும் விரைவில் தமிழகத்தில் உள்ள கோயில்களில் உதவி அா்ச்சகா்களாக பணியமா்த்தப்படவுள்ளனா்.
இது குறித்து அவா்கள் கூறுகையில், ‘ஆண்களுக்கு பெண்கள் எந்த வகையிலும் குறைந்தவா்கள் இல்லை. திருமந்திரங்கள் சொல்வதில் ஆண்கள், பெண்கள் என்ற வேறுபாடு கிடையாது. பெண்களும் அா்ச்சகா்கள்தான் என பொதுமக்களும் எங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்களும் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஒரு கோயில் என்று எடுத்துக்கொண்டால் ஆண் தெய்வம்,பெண் தெய்வம் என இருக்கும். தெய்வங்களில் பேதம் பாா்க்காத நாம், அா்ச்சகா்களிலும் ஆண் - பெண் என்ற பேதம் பாா்க்கக் கூடாது. மக்கள் எங்களுக்கு நம்பிக்கை வழங்க வேண்டும்’ என அவா்கள் கேட்டுக்கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...